Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“புஷ்பா டா”.. நிதிஷ் குமார் விக்கெட்டை எடுத்தவுடன் ஜடேஜா செய்த செயல்.. உற்சாகமான ரசிகர்கள்

சண்டிகர்: 2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா செய்த 'புஷ்பா' ஸ்டைல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த நிதிஷ் குமார் ரெட்டியை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, ஜடேஜா இந்த அதிரடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 243 ரன்கள் குவித்திருந்தது. கடினமான இந்த இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சலில் அரோரா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்கப் போராடியது. குறிப்பாக நிதிஷ் ரெட்டி 20 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆபத்தான வீரராகத் தெரிந்தார். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பந்துவீச வந்த ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டியின் விக்கெட்டை வீழ்த்தி ஹைதராபாத் அணியின் பிளே-ஆப் கனவில் மண்ணைப்போட்டார்.

IPL 2026 SRH vs RR Ravindra Jadeja s Pushpa Celebration After Dismissing Nitish Kumar Reddy in Eliminator Match

நிதிஷ் ரெட்டி ஆட்டமிழந்தவுடன், ஜடேஜா அவரைப் பெயர் சொல்லி அழைத்து, அவர் முன்னாலேயே 'புஷ்பா' திரைப்பட பாணியில் கையைத் தாடையில் தடவி சைகை காட்டி கொண்டாடினார். நிதிஷ் குமார் எப்போதும் சதம் அடித்தால் தெலுங்கு சினிமா காட்சிகளை வைத்து அதை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் எடுத்தவுடன் புஷ்பா பட பாணியில் சைகை செய்து அதை கொண்டாடி வந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கவே ரவீந்திர ஜடேஜா அதே போல சைகையை செய்து அவரை வழியனுப்பி வைத்தார். ஜடேஜாவின் இந்தச் சினிமா பாணி கொண்டாட்டம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஹைதராபாத் அணி 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்த நிலையில், ஜடேஜாவின் இந்த விக்கெட் ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தது.

வைபவ் ஆட்டத்தால் உடைந்து போன காவ்யா மாறன்.. பிளே ஆஃப் வரை வந்தும் ஏமாந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

வைபவ் ஆட்டத்தால் உடைந்து போன காவ்யா மாறன்.. பிளே ஆஃப் வரை வந்தும் ஏமாந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

முன்னதாக, ராஜஸ்தான் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இவருக்குத் துணையாக துருவ் ஜூரல் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் ஆரம்பத்திலேயே அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணியின் நம்பிக்கையை உடைத்தார்.

ஜடேஜா பந்துவீச்சில் நிதிஷ் ரெட்டி மற்றும் சலில் அரோரா ஆகிய இருவரையும் வீழ்த்தி ஹைதராபாத் அணியின் கதையை முடித்து வைத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 196 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி குவாலிபையர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Story first published: Thursday, May 28, 2026, 8:33 [IST]
Other articles published on May 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+