IPL 2026- 4வது தோல்வியை தழுவிய பிறகும் சிஎஸ்கே இடத்தை புள்ளி பட்டியலில் பாருங்க! SRH-க்கு செம லக்
ஐதராபாத்: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய ஆறாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை தற்போது பார்க்கலாம்.
ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி பெற்று ஒன்பது புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆர் சி பி அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. 6 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளை பெற்று அந்த அணி 8 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை 5 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி ஒரு தோல்வி என எட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது சிஎஸ்கே அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ் அணி ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, மூன்று தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
ஆர் சி பி அணியை வீழ்த்திய டெல்லி அணி தற்போது 5 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, இரண்டு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 6 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால் 6 போட்டிகள் விளையாடி இரண்டு வெற்றி நான்கு தோல்வி என 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
லக்னோ அணியும் ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, மூன்று தோல்வி என 4 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே வை விட குறைந்த ரன் ரேட் இருப்பதால் லக்னோ எட்டாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே வின் பங்காளிகளான மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, நான்கு தோல்வியுடன் இரண்டு புள்ளிகள் பெற்று 9-வது இடத்திலும், கொல்கத்தா அணி ஒரே ஒரு புள்ளிகளை பெற்று 10-வது இடத்திலும் உள்ளது.
அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் வீரர் ஹென்றிச் கிளாசன் ஆரஞ்சு நிற தொப்பியை வென்றிருக்கிறார். அவர் 283 ரன்கள் அடித்துள்ளார்.சுப்மன் கில் 251 ரன்களும், விராட் கோலி 247 ரன்கள் எடுத்திருக்கின்றன. இதேபோன்று பவுலர்களுக்கான பர்பிள் தொப்பியில் சிஎஸ்கே வீரர் அன்சூல் காம்போஜ் 13 விக்கெட் பெற்று முதலிடத்திலும், பிரசித் கிருஷ்ணா 11 விக்கெட்களுடன் புவனேஸ்வர் குமார் 10 விக்கெட்டுகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications