Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026 போட்டிகள் தொடங்குவதில் தாமதம்.. தமிழ்நாடு தேர்தல் காரணமாக பிசிசிஐ முக்கிய முடிவு

மும்பை: ஐபிஎல் 2026 போட்டி தாமதமாக தொடங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மார்ச் 3வது வாரத்தில் தொடங்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் 28 அன்று போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ அடுத்த வாரம் அட்டவணையில் ஒரு பகுதியை மட்டும் வெளியிடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிசிசிஐ முன்னதாக மார்ச் 26 அன்று போட்டி தொடங்கும் என உரிமையாளர்களிடம் தெரிவித்திருந்தது. ஆனால் மார்ச் 28 அல்லது 29ஐ சாத்தியமான தேதிகளில் போட்டி தொடங்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பரில் அபுதாபியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், மார்ச் 26 முதல் மே 31 வரை போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இறுதிப் போட்டியின் தேதியில் எந்த பாதிப்பும் இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டி ஒத்திவைப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் உரிமையாளர்களுக்கு இதுவரை இல்லை. எனினும், இந்தத் தாமதம் தமிழகம், கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களால் ஏற்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்தல் தேதிகள் கொல்கத்தா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), சென்னை (சென்னை சூப்பர் கிங்ஸ்), மற்றும் அசாமின் குவஹாத்தி (ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டாவது சொந்த மைதானம்) போன்ற இடங்களில் ஐபிஎல் போட்டிகளுடன் ஒத்துப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதிகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே முழுமையான அட்டவணையை வெளியிட பிசிசிஐ முதலில் திட்டமிட்டது. எனினும், கால அவகாசம் குறைவாக இருப்பதாலும், உரிமையாளர்கள் கோரியதாலும், முதலில் பகுதி அட்டவணையை வெளியிட பிசிசிஐ பரிசீலிக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலின்போதும் இதே அணுகுமுறை பின்பற்றப்பட்டது.

சீசனின் முதல் போட்டி எங்கு நடைபெறும் என்பதில் இன்னும் சந்தேகங்கள் நிலவுகின்றன. வழக்கமாக நடப்பு சாம்பியன் தான் முதல் போட்டியை நடத்தும். ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (ஆர்சிபி) சின்னசாமி மைதானம் தொடர்பாக அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் மாநில அரசுக்கிடையே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

அடுத்த வாரம் நடைபெறும் ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னரே பெரும்பாலான விவரங்கள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிசிசிஐ, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் உரிமையாளர் பிரதிநிதிகளுடன், போட்டிக்கு முந்தைய விளம்பரத் திட்டங்கள் குறித்து சந்திப்பு நடத்தியது.

Story first published: Friday, February 27, 2026, 23:06 [IST]
Other articles published on Feb 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+