Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: அதிக ரன்கள், அதிக சிக்சர், அதிக விக்கெட் வீழ்த்திய டாப் வீரர்கள் முழு பட்டியல்

அகமதாபாத்: விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2026 சீசன், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பல புதிய சாதனைகளுடன் நிறைவடைந்துள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து 'ஆரஞ்சு தொப்பி'யை வென்றுள்ளார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் 732 ரன்களுடனும், சாய் சுதர்சன் 722 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி (675 ரன்கள்), ஹென்ரிச் கிளாசன் (624 ரன்கள்), இஷான் கிஷன் (602 ரன்கள்), கே.எல். ராகுல் (593 ரன்கள்), அபிஷேக் சர்மா (563 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (563 ரன்கள்) மற்றும் ஜோஸ் பட்லர் (526 ரன்கள்) ஆகியோர் அதிக ரன்கள் குவித்த டாப் 10 பேட்டர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

IPL 2026: ஆர்சிபி கோப்பையை வென்றதற்கு காரணம்.. இடையில் எங்களுக்கு ஒரு சிக்கல் வந்தது- விராட் கோலி

IPL 2026: ஆர்சிபி கோப்பையை வென்றதற்கு காரணம்.. இடையில் எங்களுக்கு ஒரு சிக்கல் வந்தது- விராட் கோலி

அதிக சிக்ஸர்கள் விளாசிய டாப் 5 பேட்டர்களின் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 16 போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 72 சிக்ஸர்களை பறக்கவிட்டு முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் (59 சிக்ஸர்கள்) அடித்திருந்த கிறிஸ் கெயிலின் நீண்ட கால சாதனையைத் தகர்த்து அவர் புதிய புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்த அதிரடிப் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டர் அபிஷேக் சர்மா 15 போட்டிகளில் 43 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் 15 போட்டிகளில் 42 சிக்ஸர்களை விளாசி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் ரையான் ரிக்கெல்டன் 12 போட்டிகளில் 38 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 13 போட்டிகளில் 36 சிக்ஸர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை, குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 17 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி Purple Cap கைப்பற்றி மகுடம் சூடியுள்ளார். ஆர்சிபி அணியின் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் 28 விக்கெட்டுகளுடன் நூலிழையில் முதலிடத்தைத் தவறவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

IPL 2026: 5 பைனலில் களமிறங்கி 5-லும் வெற்றி..ஒவ்வொரு கோப்பையும் என் குழந்தை போன்றது-குர்னல் பாண்டியா

IPL 2026: 5 பைனலில் களமிறங்கி 5-லும் வெற்றி..ஒவ்வொரு கோப்பையும் என் குழந்தை போன்றது-குர்னல் பாண்டியா

இவர்களுக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (21 விக்கெட்டுகள்), அன்ஷுல் கம்போஜ் (21 விக்கெட்டுகள்), ஈஷான் மலிங்கா (20 விக்கெட்டுகள்), ரசிக் சலாம் தார் (19 விக்கெட்டுகள்), முகமது சிராஜ் (19 விக்கெட்டுகள்), கார்த்திக் தியாகி (18 விக்கெட்டுகள்) மற்றும் ஜேசன் ஹோல்டர் (17 விக்கெட்டுகள்) ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 10 பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த சீசன் இளம் இந்திய பேட்டர்களின் ஆதிக்கத்துடனும், துல்லியமான வேகப்பந்து வீச்சாளர்களின் விக்கெட் வேட்டையுடனும் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விளையாட்டு விருந்தாக அமைந்தது.

Story first published: Monday, June 1, 2026, 7:15 [IST]
Other articles published on Jun 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+