Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி.. முதலிடம் பிடித்து அபாரம்

சந்திகார்: ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இடது கை பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

மே 27 அன்று முல்லன்பூரில் நடந்த இப்போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் அடித்து, ஐபிஎல் பிளேஆஃப்களில் அதிவேக அரைசதம் அடித்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை சமன் செய்தார்.முன்னதாக, 2014 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சூரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் பதிவு செய்திருந்தார்.

அதிவேக அரைசதங்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் 17 பந்துகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸின் நான்காவது ஓவரின் கடைசிப் பந்தில் சகிப் ஹுசைன் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி வைபவ் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இப்போட்டியில் அவருடைய 8 சிக்ஸர்கள், ஐபிஎல் 2026 சீசனில் அவரின் மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கையை 61 ஆக உயர்த்தின.

CSK அணி, தோனி இடையே கருத்து வேறுபாடா? அணியில் தொடர்வாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விளக்கம்

CSK அணி, தோனி இடையே கருத்து வேறுபாடா? அணியில் தொடர்வாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விளக்கம்

இதன் மூலம், ஒரு ஐபிஎல் சீசனில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றார். இதற்கு முன், 2012 ஐபிஎல் தொடரில் 59 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

Vaibhav sooryavanshi: ஒரே போட்டியில் உடைத்த ஒட்டுமொத்த சாதனைகள் விவரம்.. பாட் கம்மின்ஸ் படை கதறல்

Vaibhav sooryavanshi: ஒரே போட்டியில் உடைத்த ஒட்டுமொத்த சாதனைகள் விவரம்.. பாட் கம்மின்ஸ் படை கதறல்

முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கேப்டனான கெய்ல், 2013 ஐபிஎல் சீசனிலும் 51 சிக்ஸர்களை அடித்திருந்தார். ஒரு ஐபிஎல் சீசனில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை பலமுறை அடித்த ஒரே வீரர் என்ற சிறப்பு கிறிஸ் கெய்லுக்கு மட்டுமே உண்டு.

Story first published: Wednesday, May 27, 2026, 23:20 [IST]
Other articles published on May 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+