Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 153 கிமீ. வேகத்தில் பந்துவீசிய ரபாடா.. சிக்சர் பறக்கவிட்டு வைபவ் சூர்யவன்ஷி மிரட்டல்

சந்திகார்: ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஒரு மிரட்டல் சம்பவத்தை செய்தார். குஜராத் டைட்டன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவின் 153 கி.மீ வேகப்பந்தை 15 வயது வீரர் சூர்யவன்ஷி சிக்ஸராக மாற்றினார். முல்லன்பூர் போட்டியில், ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில், ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது.

அழுத்தத்திலும், சூர்யவன்ஷி ரபாடாவின் பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். ராஜஸ்தானின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2 பந்துகளில் 1 ரன்) முகமது சிராஜ் பந்திலும், துருவ் ஜுரல் (6 பந்துகளில் 7 ரன்) ரபாடா பந்திலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். அணியின் தொடக்கம் மோசமடைந்த நிலையில் இருந்தது.

மோசமான தொடக்கத்திற்குப் பின் சூர்யவன்ஷியும் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து 37 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து இன்னிங்ஸை மீட்டெடுத்தனர். ஜடேஜா காயம் காரணமாக விலகி மீண்டும் இணைந்தார். ராஜஸ்தான் ஒன்பது ஓவர்களில் 100/2 ஆக இருந்தது.

வைபவ் சூர்யவன்ஷி காட்டில் பண மழை.. பேட்டில் விளம்பரம் செய்ய இத்தனை கோடியா? ஆடி போன கிரிக்கெட் உலகம்

வைபவ் சூர்யவன்ஷி காட்டில் பண மழை.. பேட்டில் விளம்பரம் செய்ய இத்தனை கோடியா? ஆடி போன கிரிக்கெட் உலகம்

தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசி மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இவருடைய பேட்டிங்கில் 7 விக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும். 150 கிமீ மேல் வரும் பந்தை எதிர்கொள்ள பெரிய ஜாம்பவான்களே தடுமாறுவார்கள். ஆனால் வைபவ் அதனை சிக்சர் அடித்து மிரள வைத்து விட்டார்.

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, ராஜஸ்தானின் 47 ரன் வெற்றிக்குக் காரணமானார். இதன்மூலம் கிறிஸ் கெய்லின் அதிவேக ஐபிஎல் சதத்திற்கான (30 பந்துகள்) சாதனையை நூலிழையில் தவறவிட்டார்.

வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் உலக சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் 15 வயதில் அபாரம்.. இன்று படைத்த 2 ரெக்கார்ட்

வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் உலக சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் 15 வயதில் அபாரம்.. இன்று படைத்த 2 ரெக்கார்ட்

அதே ஆட்டத்தில், ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் (59 சிக்ஸர்கள்) அடித்த வீரராக, கிறிஸ் கெய்லின் 2012 ஐபிஎல் சாதனையை முறியடித்தார். சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 243/8 ரன்களைக் குவித்தது. பதிலுக்கு SRH 196 ரன்களில் ஆல் அவுட் ஆனது.குவாலிஃபையர் 2 வெற்றி பெறும் அணி, ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்வார்கள்.

Story first published: Friday, May 29, 2026, 21:25 [IST]
Other articles published on May 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+