Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: வைபவ் சூர்யவன்ஷி டி20 வரலாற்றில் புதிய சாதனை.. 7 ஆண்டு ரெக்கார்ட் முறியடிப்பு

மும்பை: 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, டி20 தொடர்களில் அதிக ரன்கள் குவித்த உலக சாதனையை முறியடித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வைபவ், ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடந்த அணியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்த வரலாற்றுச் சாதனையை தன்வசப்படுத்தினார்.

இதன் மூலம், தனது பெயரை கிரிக்கெட் வரலாற்றுப் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், வைபவ் தனது 14வது ஆட்டத்தில் 581 ரன்கள் குவித்து, புதிய சாதனை படைத்தார். உலக சாதனையை முறியடிக்க அவருக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது, முதல் பந்திலேயே தனது ரன் கணக்கைத் தொடங்கி, வில் ஜாக்ஸ் வீசிய இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் தனது இரண்டாவது ரன்னை எடுத்து சாதனையை உறுதி செய்தார்.முன்னதாக, ஒரு டி20 தொடரில் இளம் வீரரால் அதிக ரன்கள் எடுத்த சாதனையை தேவ்தத் படிக்கல் தன்வசம் வைத்திருந்தார். படிக்கல் கர்நாடகா அணிக்காக 2019/20 சையது முஷ்டாக் அலி டிராபியில் 580 ரன்கள் குவித்திருந்தார்.

IPL 2026: அர்ஜூன் டெண்டுல்கர் போட்ட யாக்கர்.. ஆடிப்போன அஸ்வின்..

IPL 2026: அர்ஜூன் டெண்டுல்கர் போட்ட யாக்கர்.. ஆடிப்போன அஸ்வின்..

அதை முறியடித்து ஒரு ரன் கூடுதலாக எடுத்து வைபவ் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும், நடப்பு ஆட்டத்தில் வைபவ் 21 ரன்கள் கூடுதலாகச் சேர்த்தால், உலக அளவில் ஒரு டி20 தொடரில் 600 ரன்கள் எடுத்த முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிக ரன் குவித்த வீரராக வைபவ் திகழ்கிறார். அதுமட்டுமின்றி, அதிக சிக்ஸர்கள் (53) அடித்த வீரர்கள் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் உள்ளார்.

பிஹாரின் சம்ஸ்திபூரைச் சேர்ந்த இந்த இடதுகை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன், இன்னும் ஏழு சிக்ஸர்கள் அடித்தால், ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த உலக சாதனையையும் முறியடிப்பார்.தற்போது இந்த சாதனையை மேற்கிந்திய தீவுகளின் தலைசிறந்த இடதுகை பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தன்வசம் வைத்துள்ளார். கெய்ல், 2012 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 59 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுள்ளார்.

ரோகித் சர்மா இன்று 200 ரன்கள் அடித்து எங்களை காப்பற்றனும்.. பஞ்சாப் வீரர் சாஹல் கிண்டல்

ரோகித் சர்மா இன்று 200 ரன்கள் அடித்து எங்களை காப்பற்றனும்.. பஞ்சாப் வீரர் சாஹல் கிண்டல்

வைபவ் சூர்யவன்ஷி, ஒரு டி20 தொடரில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த முதல் மற்றும் ஒரே இந்திய வீரர் ஆவார். இந்த சாதனையை அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ராயல்ஸ் அணியின் கடைசி ஆட்டத்தில் எட்டினார்.

Story first published: Sunday, May 24, 2026, 17:09 [IST]
Other articles published on May 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+