Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷியை இந்த பாகிஸ்தான் வீரரோடு ஒப்பிட்டு பேசுவதா? யூசுப் பதிவால் கொந்தளித்த ரசிகர்கள்

சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ், தனது முதிர்ச்சியான மற்றும் அதிரடி ஆட்டத்தால் ஜாம்பவானளின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். சச்சின் டெண்டுல்கர் முதல் கிறிஸ் கெய்ல் வரை பலரும் வைபவ் ஒரு வருங்கால நட்சத்திரம் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்டருமான முகமது யூசுப் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பாராட்டிய யூசுப், அவரை பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

IPL 2026 Vaibhav Suryavanshi compared to Shahid Afridi by Mohammad Yousuf Fans are not happy

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "15 வயது கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி எனக்கு ஷாகித் அப்ரிடியை நினைவுபடுத்துகிறார். இளம் வயது, பயமற்ற அணுகுமுறை, வெடிக்கும் அதிரடி ஆட்டம் என ஆற்றல் மிக்கவராகத் திகழ்கிறார். கிரிக்கெட்டின் எதிர்காலம் இதோ வந்துவிட்டது" எனப் பதிவிட்டிருந்தார்.

கொந்தளித்த ரசிகர்கள்

முகமது யூசுப் நல்ல எண்ணத்தில் இந்தப் பதிவைச் செய்திருந்தாலும், இந்திய ரசிகர்கள் இதனை ஏற்கவில்லை. வைபவ் சூர்யவன்ஷியைப் போன்ற ஒரு திறமையான வீரரை, அப்ரிடியுடன் ஒப்பிடுவதா என ரசிகர்கள் யூசுப்பை சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

ரசிகர் ஒருவர் தனது பதிவில், "அதிரடி ஆட்டம் ஆடும் வைபவ்வை, பந்தை கடித்து பதம் பார்த்த அப்ரிடியுடன் ஒப்பிடுவது எப்படிச் சரியாகும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு ரசிகர், "அப்ரிடி ஒரு சராசரி வீரர். ஒருநாள் போட்டிகளில் வெறும் 22 சராசரி வைத்துள்ள அப்ரிடியுடன், ரன் மெஷினாகத் திகழும் வைபவ்வை ஒப்பிடுவதை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

IPL 2026 GT vs RR: வைபவ் அதிக ரன் எடுத்தால் குஜராத் காலி.. பேட்டிங்கை நம்பி ஜெயிக்க முடியாது

IPL 2026 GT vs RR: வைபவ் அதிக ரன் எடுத்தால் குஜராத் காலி.. பேட்டிங்கை நம்பி ஜெயிக்க முடியாது

ரன் வேட்டையில் வைபவ்

நடப்பு ஐபிஎல் சீசனில் வைபவ் சூர்யவன்ஷி இதுவரை 680 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பிக்கான பந்தயத்தில் முன்னிலையில் உள்ளார். பல சாதனைகளைத் தகர்த்து வரும் வைபவ், இந்திய தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அப்ரிடி தனது கேரியர் முழுவதும் அதிரடியாக விளையாடினாலும், அதில் நிலைத்தன்மை இல்லை என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால், வைபவ் ஒவ்வொரு போட்டியிலும் ரன்களைக் குவித்து வருவததால், இந்த ஒப்பீடு தேவையற்றது என்பது ரசிகர்களின் வாதமாக உள்ளது.

Story first published: Friday, May 29, 2026, 9:09 [IST]
Other articles published on May 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+