Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் எந்த இந்திய வீரரும் செய்யாததை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. மாபெரும் சாதனை!

கவுகாத்தி: 2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ரன் மழை பொழிந்து புதிய சரித்திரம் படைத்துள்ளார். வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அவர் உலக சாதனையை சமன் செய்துள்ளார். கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணி நிர்ணயித்த 212 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு, தொடக்க வீரர் சூர்யவன்ஷி அதிரடி தொடக்கம் தந்தார்.

ஆட்டத்தின் 5வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட சூர்யவன்ஷி, 15 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 15 அல்லது அதற்கு குறைவான பந்துகளில் இரண்டு முறை அரைசதம் அடித்த உலகின் 2வது வீரர் என்ற பெருமையை 15 வயதான சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் 2024ல் டில்லி கேபிடல்ஸ் அணியின் ஜேக் பிரேசர் மெக்குர்க் இரண்டு முறை 15 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சாதனையைச் செய்திருந்தார். வேறு எந்த இந்திய வீரரும் இந்த சாதனையை செய்ததில்லை.

IPL 2026 Vaibhav Suryavanshi Matches World Record 15-Ball Fifty Destroys RCB Bowling in IPL 2026

இந்த சீசனில் சூர்யவன்ஷி அடிக்கும் 2வது அதிவேக அரைசதம் இதுவாகும். ஏற்கனவே கடந்த மார்ச் 30ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இதே மைதானத்தில் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பெங்களூரு அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 26 பந்துகளை சந்தித்த அவர், 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 9வது ஓவரில் குருணல் பாண்டியா பந்துவீச்சில் இவர் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி, துருவ் ஜூரலுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு வெறும் 37 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (13 பந்துகள்) வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல், பாட் கம்மின்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் 14 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். யூசுப் பதான், சுனில் நரைன் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் 15 பந்துகளில் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

பெங்களூரு அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்த 15 வயது சிறுவனின் இந்த ஆட்டம், மைதானத்தில் இருந்த ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. சூர்யவன்ஷியின் இந்த அதிரடி இன்னிங்ஸ் ராஜஸ்தான் அணியின் வெற்றிப் பயணத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

Story first published: Saturday, April 11, 2026, 8:42 [IST]
Other articles published on Apr 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+