IPL 2026 தொடரில் லீவ்.. மனைவி அனுஷ்கா உடன் ஆசிரமத்திற்கு சென்ற விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், அவருடைய மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகராஜின் ஆசிரமத்திற்கு ஆன்மீக வழிபாட்டிற்காக நேரில் வந்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் இது அவர்களுக்கு மூன்றாவது வருகையாகும்.
ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான கோலி, தனது அணிக்கு கிடைத்த ஐந்து நாள் இடைவேளையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த ஆன்மீகச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளுக்கு 19 ரன்கள் எடுத்த கோலி, வெள்ளிக்கிழமை குஜராத் டைட்டன்ஸுடன் மோதும் போட்டிக்கு நடுவே இந்த நேரத்தைப் பயன்படுத்தினார்.

திங்கட்கிழமை அன்று, பிருந்தாவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஹிட் ராதா கேலி குஞ்ச், வராஹ் காட் ஆசிரமத்திற்கு வருகை தந்த கோலி மற்றும் அனுஷ்கா, பிரேமானந்த் ஜி மகராஜுடன் 'தனிப்பட்ட ஆன்மீக உரையாடல் நடத்தினர். இதன்மூலம் அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.
இது கடந்த ஐந்து மாதங்களில் இத்தம்பதியினரின் மூன்றாவது வருகை என்றாலும், இந்த ஆண்டின் இரண்டாவது முறையாகும். பிப்ரவரி மாதத்தில் தங்கள் மகன் ஆகாஷின் பிறந்தநாளுக்கு சில நாட்களுக்குப் பிறகு ஒருமுறை பிருந்தாவனத்திற்கு வந்திருந்தனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டில், ஜனவரி மாதம் தங்கள் குழந்தைகளுடன் ஒருமுறையும், மே மாதத்தில் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு ஒரு முறையும், டிசம்பரில் மீண்டும் ஒரு முறையும் என மூன்று முறை பிரேமானந்த் மகராஜின் ஆசிரமத்திற்கு வந்துள்ளனர்.
ஆசிரமத்தின் யூடியூப் சேனலான 'பஜன் மார்க்' வெளியிட்ட காணொளிகளில், விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் ஒரு பெரிய கூட்டத்துடன் ஆசிரம மண்டபத்தில் அமர்ந்து பிரேமானந்த் மகராஜின் பிரசங்கங்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
முந்தைய சந்திப்புகளில், ஆன்மீகத் தலைவர் பிரேமானந்த் மகராஜ், வாழ்க்கையின் நோக்கம் மற்றும் குருவின் வழிகாட்டுதலின் கீழ் பக்தியின் பயணத்தைப் பற்றி விளக்கினார். 2023 இல், இத்தம்பதியினர் மகாகாளேஷ்வர், நிம் கரோலி பாபா ஆசிரமம் போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் சென்றுள்ளனர்.
விராட் கோலி தனது அடுத்த ஐபிஎல் போட்டியில் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளார். தற்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அந்த அணியுடன், ஆர்சிபி அணியில் அவரது பங்கு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications