Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: மாபெரும் உலக சாதனைக்கு அருகில் விராட் கோலி.. இன்னும் 68 ரன்கள் எடுத்தால் போதும்!

பெங்களூரு: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இன்னும் 68 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஒரு பிரம்மாண்ட வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 18) டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியைத் தன்வசம் வைத்துள்ள விராட் கோலி, ரன் குவிப்பில் அடுத்தடுத்த மைல்கற்களை எட்டி வருகிறார். தற்போது இந்தியாவில் மட்டும் அவர் 289 டி20 போட்டிகளில் விளையாடி 9,932 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் மற்றும் 76 அரைசதங்கள் அடங்கும்.

IPL 2026 Virat Kohli Nears Historic Milestone 68 Runs Away from 10 000 T20 Runs in India vs Delhi Capitals

இந்தியாவில் கோலியின் ரன் வேட்டை

இந்திய மண்ணில் அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் 7,865 ரன்களும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 311 ரன்களும் எடுத்துள்ளார். இதுதவிர, இந்திய தேசிய அணிக்காக இந்தியாவில் நடந்த டி20 போட்டிகளில் 1,577 ரன்களும், டெல்லி மாநில அணிக்காக 179 ரன்களும் சேர்த்துள்ளார். அடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 68 ரன்கள் எடுத்தால், இந்தியாவில் 10,000 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

ரோஹித், தவான் பின்னடைவு

இந்த பட்டியலில் கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா 319 போட்டிகளில் 8,563 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஓய்வு பெற்ற ஷிகர் தவான் 7,626 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். சர்வதேச அளவில் பார்த்தால், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸ் தனது நாட்டில் 7,492 ரன்கள் எடுத்துள்ளார். இவர்களை விட கோலி சில ஆயிரம் ரன்கள் முன்னிலையில் உள்ளார்.

காத்திருக்கும் பிற சாதனைகள்

இந்த ஒரு சாதனையைத் தவிர, விராட் கோலிக்கு இன்னும் சில சாதனைகளும் காத்திருக்கின்றன. அவர் ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்க இன்னும் 111 ரன்கள் தேவை. அதேபோல், ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் 300 சிக்சர்களை எட்ட அவருக்கு இன்னும் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது அவர் 299 சிக்சர்களுடன் உள்ளார்.

தொடர் வெற்றிகளால் ஆர்சிபி அணி உற்சாகத்தில் இருக்கும் வேளையில், கோலியின் இந்த உலக சாதனை முயற்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்பதால், கோலி இந்த சாதனையை எளிதாக எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 18, 2026, 8:05 [IST]
Other articles published on Apr 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+