IPL 2026: விராட் கோலிக்கு இன்னும் 72 ரன்கள் தேவை.. மாபெரும் சாதனையை எதிர்நோக்கி கிங்
டெல்லி: ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, நடப்பு சீசனில் 400 ரன்களை எட்ட இன்னும் 72 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதன் மூலம் அவர் 11வது முறையாக இந்தச் சாதனையைப் படைக்கவுள்ளார். திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டஸ் அணியுடன் ஆர்சிபி பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐபிஎல் வரலாற்றில் 19 சீசன்களில் 11வது முறையாக 400 ரன்கள் மைல்கல்லை எட்டும் சாதனையை விராட் கோலி நிகழ்த்த உள்ளார். 37 வயதாகும் அவர், பல சீசன்களில் ரன் குவித்து வருகிறார். இந்த சீசனில் இதுவரை ஏழு போட்டிகளில் 54.66 சராசரியுடன் 328 ரன்கள் எடுத்துள்ளார். ஆறாவது அதிக ரன் குவித்த வீரராக உள்ள அவர், இன்னும் 72 ரன்கள் எடுத்தால் இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை மீண்டும் கைப்பற்ற வாய்ப்புள்ளது.

கோலி, 2008-10 வரையிலான முதல் மூன்று ஐபிஎல் சீசன்களில் 400 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. ஆனால், 2011ஆம் ஆண்டில் 557 ரன்கள் குவித்து, தொடரின் இரண்டாவது அதிக ரன் குவித்த வீரரான பிறகு, தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 400 ரன்களுக்கு மேல் ஒன்பது சீசன்களில் குவித்த ஷிகர் தவான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா ஆகியோர் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், RCB அணியின் பேட்டிங் இந்த சீசனில் வலுவான டாப்-ஆர்டர் ஆட்டத்தால் கலக்கி வருகிறது. தேவ்தத் படிக்கல்லின் ஃபார்ம் திரும்பியது அணிக்கு மேலும் பலத்தை அளித்து,ள்ளது. மிடில் ஆர்டர் வீரர்களும் போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதில் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
ஆனால் RCB அணியின் வலிமை பேட்டிங் திறனுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர்களின் பந்துவீச்சாளர்களும் முக்கியமான கட்டங்களில், குறிப்பாக 'டெத் ஓவர்களில்' ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இது அதிக ரன் குவிக்கும் டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிகளுக்கு எதிராக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான முந்தைய போட்டியில், RCB-ன் பந்துவீச்சுப் பிரிவு அழுத்தமான சூழ்நிலையிலும் சிறந்த பொறுமையைக் காட்டியது. சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் 'டெத் ஓவர்களில்' தங்கள் திட்டங்களை கச்சிதமாக செயல்படுத்தி, பெரிய ஸ்கோரை நோக்கியிருந்த குஜராத் அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications