Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ”எப்போதும் நீதான் டி20 கிங்”.. ஒரே போட்டியில் 3 உலக சாதனைகள் படைத்த விராட் கோலி!

தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி ரன் வேட்டை நடத்தி 3 பிரம்மாண்ட உலக சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார். ஒவ்வொன்றிலும் புதிய மைல்கற்களை எட்டியுள்ள கோலி, டி20 கிரிக்கெட்டில் தான் இன்னும் 'கிங்' என்பதை நிரூபித்துள்ளார்.

1200 ரன்கள் சாதனை

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1200 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 37 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இந்தப் போட்டியில் 41 ரன்களைக் கடந்தபோது இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். குறிப்பாக, 40 ரன்களில் இருந்தபோது ஒரு மெகா சிக்ஸர் விளாசி இந்தச் சாதனையை அவர் எட்டினார். இந்தப் பட்டியலில் அடுத்த இரண்டு இடங்களிலும் கோலியே உள்ளார். டெல்லி அணிக்கு எதிராக 1196 ரன்களும், சென்னை அணிக்கு எதிராக 1188 ரன்களும் அவர் குவித்துள்ளார்.

9-வது முறை 500 ரன்கள்

ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக ரன் குவிக்கும் தனது அசுர வேகத்தைத் தொடரும் கோலி, ஐபிஎல் வரலாற்றில் 9-வது முறையாக ஒரு சீசனில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் அவரே 8 முறை 500 ரன்களைக் கடந்திருந்தது சாதனையாக இருந்தது. தற்போது அதனை 9 ஆக உயர்த்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தலா 7 முறை இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

IPL 2026 Virat Kohli s Dharamshala Masterclass 3 Massive World Records Shattered in a Single Game

கூட்டணியில் சாதனை

தனிப்பட்ட சாதனைகள் மட்டுமின்றி, சக வீரர்களுடன் இணைந்து ரன் குவிப்பதிலும் கோலி முதலிடம் பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் 210 முறைகளுடன் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். இந்த வரிசையில் டேவிட் வார்னர் 200 முறைகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

ஒரே போட்டியில் பேட்டிங், நிலைத்தன்மை மற்றும் கூட்டணி என மூன்று தளங்களிலும் புதிய சரித்திரம் படைத்துள்ள விராட் கோலியை கிரிக்கெட் உலகம் வியந்து பாராட்டி வருகிறது. 37 வயதிலும் அவரது இந்த வேகம் இளம் வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

IPL 2026: ஓவராக சவால் விட்ட கோலி.. ஐஸ் கட்டியாக நின்ற ப்ரார்.. தரம்சாலாவில் மோதல்.. என்ன நடந்தது?

IPL 2026: ஓவராக சவால் விட்ட கோலி.. ஐஸ் கட்டியாக நின்ற ப்ரார்.. தரம்சாலாவில் மோதல்.. என்ன நடந்தது?

டி20-யில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள்:

விராட் கோலி (எதிரணி: பஞ்சாப் கிங்ஸ்) - 1205 ரன்கள்
விராட் கோலி (எதிரணி: டெல்லி கேப்பிடல்ஸ்) - 1196 ரன்கள்
விராட் கோலி (எதிரணி: சென்னை சூப்பர் கிங்ஸ்) - 1188 ரன்கள்
ரோகித் சர்மா (எதிரணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 1161 ரன்கள்
டேவிட் வார்னர் (எதிரணி: பஞ்சாப் கிங்ஸ்) - 1134 ரன்கள்

Story first published: Sunday, May 17, 2026, 18:42 [IST]
Other articles published on May 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+