Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 120% பங்களிப்பை அணிக்கு தருகிறேன்.. ஒவ்வொரு தொடருக்காகவும் தனி பயிற்சி எடுக்கிறேன்- விராட் கோலி

பெங்களூரு: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கியுள்ள ஆர் சி பி அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் வீழ்த்தி இருக்கிறது. இந்த போட்டியில் நட்சத்திர விராட் கோலி 38 பந்துகளை எதிர் கொண்டு 69 ரன்கள் குவித்தார்.

இதில் ஐந்து பவுண்டரி, ஐந்து சிக்சர்கள் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 181 என்று அளவில் மிரட்டலாக இருந்தது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விராட் கோலி அணியில் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 64 வது அரை சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.

கடந்த ஒரு ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் விராட் கோலி அதே ஃபார்மை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து போட்டிக்கு பின் பேசிய அவர், டி20 கிரிக்கெட்டுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஐபிஎல் போட்டியில் கடைசியாக கடந்த ஆண்டு பைனலில் விளையாடியது தான்.

ஆனால் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சர்வதேச ஒரு நாள் தொடர்களில் நான் அபாரமாக விளையாடி வருகின்றேன். இதன் மூலம் என்னுடைய பேட்டிங் அப்படியே இருக்கின்றது என நினைக்கின்றேன். அதில் கிடைத்த உத்வேகத்தை ஐபிஎல் தொடரிலும் நான் கொண்டு வந்திருக்கின்றேன். எனக்கு ரிதம் இருக்கும் வரை நான் தேவையில்லாத ஷாட்கள் என்றும் விளையாடியது கிடையாது.

திரைமறைவுக்கு பின் நான் கடுமையாக உழைத்து வருகின்றேன். என்னுடைய உடல் தகுதியை பாதுகாக்க நான் அதிக கவனம் செலுத்துகின்றேன். பேட்டிங் பயிற்சி மற்றும் கடின உழைப்பு அனைத்தும் இணைந்து வந்து வெற்றியை தேடி தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது நல்ல ஒரு தொடக்கத்தை பெற்றெடுக்கின்றோம். இதையே அடித்தளமாக வைத்து இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும்.

நான் கடந்த 15 ஆண்டுகளாக அதிக அளவு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன். ஓய்வின்றி விளையாடிருக்கின்றேன். இதனால் நான் உடலளவில் சோர்வடைய அதிக வாய்ப்பு இருந்தது. எனவே இது போன்ற ஓய்வு நேரம் எனக்கு உடல் அளவில் நம் மனது அளவிலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. நான் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க விரும்புகின்றேன்.

ஒவ்வொரு போட்டியும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நான் களத்திற்கு திரும்பி வரும்போது என்னுடைய 120 சதவீத பங்களிப்பை கொடுக்க வேண்டும். நான் எப்போதுமே ஒரு தொடருக்கு வருகிறேன் என்றால் பயிற்சி இல்லாமல் வரமாட்டேன். எனவே ஒரு பார்மெட்டில் மட்டும் விளையாடுவதால் கூடுதல் ஓய்வு என்னை மனதளவிலும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கின்றது.

உடல் அளவில் நல்ல தகுதியுடன் இருக்கும் போது மனதும் சிறப்பாக இயங்கும். இது அனைத்தும் ஒன்றிணைந்து விளையாடும்போது அணியின் வெற்றிக்காக நம்மால் பங்களிக்க முடியும். இதை தான் ஒரு வீரராக நான் செய்ய விரும்புகிறேன். தொடர்ந்து அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும். தொடர்ந்து கடின உழைப்பை அணிக்காக வெளிப்படுத்த வேண்டும். இன்றைய ஆட்டத்தில் படிக்கல் சிறப்பாக விளையாடியுள்ளார்.

முதல் பந்தில் இருந்து அவர் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். பவர் பிளேவில் அவர் ஆடிய விதத்தைப் பார்க்கும்போது நான் தொடர்ந்து அவருக்கு ஸ்ட்ரைக் வழங்கினேன். இடையில் நானும் கொஞ்சம் பவுண்டரி அடித்தேன். எதிர் அணியிடம் இருந்து ஆட்டத்தை படிக்கல் கவர்ந்து சென்று விட்டார். நான் அவரிடம் தொடர்ந்து இதே போல் விளையாடு என்று கூறினேன். இன்று அவருடைய பேட்டிங்கில் அனைத்து நுட்பங்களும் சிறப்பாக இருந்தது. உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது என்று விராட் கோலி கூறியுள்ளார்.

Story first published: Saturday, March 28, 2026, 23:59 [IST]
Other articles published on Mar 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+