Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026:டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மாபெரும் சாதனை..சோயிப் மாலிக் ரெக்கார்ட் முறியடிப்பு

பெங்களூரு: விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது, அவர் டி20 வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். பெங்களூருவின் சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக்கின் 13,571 ரன்களைக் கடக்க கோலிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன. 202 ரன்கள் துரத்திய ஆட்டத்தில், தொடக்க வீரராகக் களமிறங்கிய அவர், போட்டியின் 8வது ஓவரில் ஒரு சிங்கிள் அடித்து இந்த மைல்கல்லை எட்டினார். 10 ஓவர்கள் முடிவில், கோலி 23 பந்துகளில் 38 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக், 2005 முதல் 2025 வரை சுமார் 30 அணிகளுக்காக 557 டி20 போட்டிகளில் விளையாடி 13,571 ரன்கள் குவித்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை பாகிஸ்தானை அவர் வழிநடத்தினார். ஆனால் கோலி இந்த இலக்கை 415வது போட்டியிலேயே இந்தச் சாதனையை முறியடித்தது.

விராட் கோலி, இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காகவும் அவர் களமிறங்கியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளில் 14,562 ரன்களுடன் உலக சாதனை படைத்துள்ளார். இவரை அடுத்து பொல்லார்ட் 735 போட்டிகள், 14,482 ரன்கள் மற்றும் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 528 போட்டிகள், 14,449 ரன்கள் ஆகியோர் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 433 போட்டிகளில் 14,063 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 493 ஆட்டங்களில் 13,845 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். தற்போது ஆறாவது இடத்தில் விராட் கோலி 13,581 ரன்கள் மற்றும் ஏழாவது இடத்தில் சோயப் மாலிக் 13,571 ரன்கள் உடன் உள்ளனர். வார்னர், டி20 வரலாற்றில் அதிக 50+ ஸ்கோர்களைப் பதிவு செய்தவர்.இவர்களைத் தொடர்ந்து அதிக ரன் குவித்தோர் முதல் பத்து இடங்களுக்குள் ஜேம்ஸ் வின்ஸ் 13,102 ரன்கள், குயின்டன் டி காக் 12,322 ரன்கள். மற்றும் இந்திய வீரர் ரோஹித் சர்மா 12,248 ரன்கள் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Sunday, March 29, 2026, 6:30 [IST]
Other articles published on Mar 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+