Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விற்பனைக்கு வந்த ஆர்சிபி.. பெங்களூர் அணியில் விராட் கோலி தொடர்வாரா? முன்னாள் வீரர் கருத்து

மும்பை: விராட் கோலி, ஆர்சிபி அணியில் தொடர்வாரா என்பது குறித்து முன்பு முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரரான முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி விற்பனைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கோலியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் விராட் கோலி குறித்து பல்வேறு விசயங்களை தனது யூடியூப் சேனலில் கையிப் பேசினார். அதில், "விராட் கோலி இப்போது கொஞ்சம் அமைதியாகிவிட்டார். திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதற்கும் இப்போதைய நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இப்போது அவரை விளையாட்டில் பார்க்கும்போது, IPL போட்டி ஒன்றில் அவரை சந்தித்தேன்".

Will Virat Kohli continues to play for RCB

"ரபாடாவை இறங்கி வந்து பவுண்டரி அடித்தார். அரைசதம் அடித்து போட்டியை வென்றிருப்பார். ஆனால் மிகவும் அமைதியாக இருந்தார். என்னிடம் அவர் சொன்னார், ரபாடாவை ஆரம்பத்திலேயே தாக்கவில்லை என்றால் அவர் என்னை விளையாட விடமாட்டார். அதனால் முதல் பந்திலேயே அடிக்க வேண்டும் என்று நினைத்தேன்."

"அபிஷேக் இப்போது அதையே செய்கிறார் கிரிக்கெட் புரிதல் என்று வரும்போது, அமைதியுடன் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு ஆண்டுகள் விளையாடிய பிறகும் இன்னும் தனது ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறார். இப்போதும் என்னை அதே போல் சந்திக்கிறார். முன்பு உங்களை அண்ணா என்று கூப்பிட்டாரானால் இப்போதும் அண்ணா என்றே கூப்பிடுவார்."

"மைதானத்துக்கு வெளியே சந்தித்தால், உங்களுடன் விளையாடியதை நினைவில் வைத்து மரியாதை கொடுப்பார். அதில் எந்த மாற்றமும் இல்லை," என்று அவர் கூறினார். அடுத்த சீசனில் RCB பெயர் இருக்காது என்று வதந்திகள் உள்ளன. புதிய உரிமையாளர்கள் எந்த திசையில் செல்வார்கள்."

"பெயர் மாற்றமா அல்லது ரீபிராண்டிங்கா என்பதை பார்க்கத்தான் விராட் கோலி வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஒரு சில வாரங்களில் இது தெரிந்துவிடும்" என்று கையிப் கூறினார். கடந்த சீசனில் கோலி, 15 இன்னிங்ஸ்களில் 657 ரன்கள் குவித்தார். இதில் சராசரி 54.75, ஸ்ட்ரைக் ரேட் 144.71 உடன் 8 அரைசதங்கள் அடித்தார்.

Story first published: Friday, November 7, 2025, 21:57 [IST]
Other articles published on Nov 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+