Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2027: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக கங்குலி நியமனம்

டெல்லி: ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது. இதன் மூலம் டெல்லி அணியில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.

முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும், கிரிக்கெட் இயக்குநராகவும் பணியாற்றிய கங்குலி, முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானிக்கு பதிலாக தற்போது இந்த பொறுப்பை ஏற்கிறார்.டெல்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாகத்தில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை கங்குலி வகித்துள்ளார். குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளுக்குமே கிரிக்கெட் இயக்குநராக அவர் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sourav Ganguly

இந்த புதிய நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சௌரவ் கங்குலி, இந்த அணியுடனான தனது "நெருங்கிய உறவு" குறித்துப் பேசியதோடு, ஒரு அச்சமற்ற அணியை உருவாக்குவதை ஆவலோடு எதிர்பார்ப்பதாகக் கூறினார். "ஐபிஎல் தொடரில் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். டெல்லி கேபிடல்ஸ் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு அணியாகும், மேலும் பல ஆண்டுகளாக இந்த அணியுடன் எனக்கு ஒரு வலுவான உறவு உள்ளது," என்று கங்குலி தெரிவித்தார்.

IND vs WI: முதல் டி20-யில் ஆடுகளம் எப்படி இருக்கும்? எந்த அணிக்கு சாதகம்? புஜாரா கருத்து

IND vs WI: முதல் டி20-யில் ஆடுகளம் எப்படி இருக்கும்? எந்த அணிக்கு சாதகம்? புஜாரா கருத்து

"அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம், பிற பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுடன் நான் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். இது எனக்கு ஒரு உற்சாகமான பொறுப்பாகும். எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர், மேலும் கடந்த காலங்களில் நாங்கள் மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். புதிய சீசனில் இந்த அணியுடன் இணைந்து பணியாற்றி, ஒரு வலுவான மற்றும் அச்சமற்ற அணியை உருவாக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து மூன்று சீசன்களாக டெல்லி அணி பிளே-ஆஃப் சுற்றுகளுக்குத் தகுதி பெறத் தவறியதை அடுத்து, ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக ஹேமங் பதானி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதே காலகட்டத்தில், அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், அதன்பிறகும் டெல்லி அணியின் நிலைமை மாறவில்லை. 2025 மற்றும் 2026 ஆகிய இரு சீசன்களிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தடுமாறியதை அடுத்து, பதானியை விடுவிக்க நிர்வாகம் முடிவு செய்தது.

ஐபிஎல் 2027 ஏலம் எங்கு நடைபெறும்? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Also Read

ஐபிஎல் 2027 ஏலம் எங்கு நடைபெறும்? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கங்குலியின் நியமனத்தை டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைவரும், இணை உரிமையாளருமான பார்த்த் ஜிண்டால் வரவேற்றுள்ளார். "தாதா எப்போதும் டெல்லி கேபிடல்ஸ் குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்து வருகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்களிலும், சிறந்த நிர்வாகிகளிலும் ஒருவரான அவர், டெல்லி கேபிடல்ஸின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று பயிற்சியாளர் உலகிற்குள் அடியெடுத்து வைப்பதை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 6, 2026, 14:09 [IST]
Other articles published on Oct 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+