Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2027: டெல்லி அணிக்கு கிடைத்த அற்புத பரிசு.. கங்குலியுடன் இணைந்த யுவராஜ் சிங்

டெல்லி: 2027 ஐபிஎல் தொடருக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், நியமிக்கப்பட்டுள்ளார். சௌரவ் கங்குலி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், யுவராஜ் சிங் இந்த புதிய பொறுப்பை ஏற்கிறார்.

இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 44 வயதான யுவராஜ் சிங், உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரராவார்.

Yuvraj Singh

சமீபகாலமாக பல முன்னணி மற்றும் வளர்ந்து வரும் இந்திய வீரர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு வந்த யுவராஜ் சிங்கிற்கு, இதுவே முதல் அதிகாரப்பூர்வ பயிற்சியாளர் பணியாகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது பயிற்சியாளர் பயணத்தை அவர் தொடங்குகிறார்.

விராட் கோலி போன்ற ஒரு தனி வீரரால் இந்திய அணிக்கு உலககோப்பையை வென்று தர முடியாது.. கையிப் அட்வைஸ்

விராட் கோலி போன்ற ஒரு தனி வீரரால் இந்திய அணிக்கு உலககோப்பையை வென்று தர முடியாது.. கையிப் அட்வைஸ்

டெல்லி அணியுடன் யுவராஜ் சிங் இணைவது இது முதன்முறையல்ல. முன்னதாக 2015 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 16 கோடிக்கு டெல்லி அணியால் அவர் ஏலம் எடுக்கப்பட்டார். அந்த சமயத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராகத் திகழ்ந்த அவர், அந்த சீசனில் டெல்லி அணிக்காக 14 போட்டிகளிலும் விளையாடினார்.

கடந்த மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் தனது பயிற்சியாளர்கள் குழுவை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹேமங் பதானிக்கு பதிலாக சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வேணுகோபால் ராவும் அணியில் இருந்து விலகியுள்ளார்.

ஐசிசி விருது.. சுப்மன் கில் உலக சாதனை! விராட் கோலி கூட இதை செய்யல

Also Read

ஐசிசி விருது.. சுப்மன் கில் உலக சாதனை! விராட் கோலி கூட இதை செய்யல

இதனிடையே, டெல்லி அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ரிஷப் பண்ட்டுடன் யுவராஜ் சிங் ஏற்கனவே தனிப்பட்ட முறையில் பணியாற்றியுள்ளார். பண்ட் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இரண்டு சீசன்கள் விளையாடிய பிறகு, வர்த்தக முறையில் மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 13, 2026, 21:37 [IST]
Other articles published on Oct 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+