Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்பயர் முடிவை மைக் பிடித்து விமர்சனம் செய்த டோணி.. அபராதம் விதித்தார் போட்டி ரெப்ரி!

மும்பை: நடுவர் முடிவை மைக் பிடித்து விமர்சனம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் டோணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் முதலாவது குவாலிஃபையரில் நேற்று, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. முதலில் பேட் செய்த மும்பை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு, 187 ரன்கள் குவித்தது.

வலுவான தொடக்கம் தேவை

வலுவான தொடக்கம் தேவை

எனவே, இரண்டாவதாக பேட் செய்ய வந்த சென்னை தனது துவக்க ஆட்டக்காரர்களான ட்வைன் ஸ்மித் மற்றும் மைக்கேல் ஹஸ்சி ஆகியோரின் வலுவான தொடக்கத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், மலிங்கா வீசிய ஃபுல்டாஸ் பந்தில் ட்வைன் ஸ்மித் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

தவறான தீர்ப்பு

தவறான தீர்ப்பு

ஆனால், டிவி ரிப்ளேயில், அந்த பந்து, லெக் ஸ்டெம்ப்புக்கு வெளியே மிக தொலைவில் (5 ஸ்டம்ப் இருந்தால் அதில் பட்டிருக்கும்) சென்றது தெரியவந்தது. அம்பயர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் இந்த முடிவை எடுத்திருந்தார்.

இந்நிலையில், சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மறக்க முடியுமா

மறக்க முடியுமா

போட்டிக்கு பிறகு, பரிசளிப்பு நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த டோணி, தனது அணி பேட்டிங்கில் சொதப்பிவிட்டது என்று கூறினார். மேலும், ட்வைன் ஸ்மித்துக்கு, மோசமான விதத்தில் அவுட் கொடுத்ததையும் மறக்க முடியாது என்று கூறினார்.

அபராதம்

அபராதம்

பொது இடத்தில், அம்பயர் முடிவை விமர்சனம் செய்து டோணி இவ்வாறு கூறியது, ஐபிஎல் நடத்தை விதிமுறைகள் படி தவறானதாகும். எனவே, போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே, டோணிக்கு போட்டி ஊதியத்தில் 10 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளார்.

மறக்க முடியாத செவ்வாய்

மறக்க முடியாத செவ்வாய்

டோணி தலைமையிலான சென்னை அணி முக்கியமான நேற்றைய குவாலிஃபையர் போட்டியில் தோற்றது. டோணி, முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார். இந்நிலையில், டோணிக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், டோணிக்கு இது மறக்க முடியாத செவ்வாய்க்கிழமையாகியுள்ளது. ஒழுக்கமாக ஆடும் அணி என்பதற்காக ஃபேர்பிளே விருது பெறுவதை வழக்கமாக கொண்ட சென்னை அணி கேப்டனுக்கே, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 20, 2015, 12:26 [IST]
Other articles published on May 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+