Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றியுடன் ஐபிஎல் கணக்கைத் தொடங்கியது புனே!

Pune Warriors
மும்பை: ஐ.பி.எல் அறிமுக போட்டியை புனே வாரியர்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தனது முதல் போட்டியிலேயே, பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பையில் நடந்த 5-வது லீக்கில் யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. புனே அணி, ஐ.பி.எல்.-ல் விளையாடுவது இதுவே முதல் முறை.

டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்தில் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. கேப்டனும், புயல்வேக தொடக்க ஆட்டக்காரருமான கில்கிறிஸ்ட் (1 ரன்) முதல் ஓவரிலேயே, அவுட் ஆனார். இதன் பிறகு பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஷான் மார்ஷ் (1 ரன்), வல்தடி (6 ரன்), தினேஷ் கார்த்திக் (0) ஆகியோர் 9 ரன்னுக்குள் வெளியேற்றப்பட்டனர். சன்னி சிங் (12 ரன்), அபிஷேக் நாயர் (12 ரன்) ஆகியோரும் சீக்கிரம் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் பஞ்சாப் அணி 100 ரன்களை தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரையான் மெக்லரன், பஞ்சாப் அணிக்கு கைகொடுத்தார். ஆட்டமிழக்காமல் அவர் 51 ரன்கள் குவித்தார். பியுஷ் சாவ்லா 15 ரன்கள் எடுத்தார்.

புனே பவுலர்கள் அல்போன்சா தாமஸ் 2 விக்கெட்டுகளும், ஸ்ரீகாந்த் வாக் 3 விக்கெட்டுகளும், வெய்ன் பார்னல், ரைடர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

புனே அணி வெற்றி

அடுத்து 113 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய புனே வாரியர்ஸ் அணி முதல் பந்திலேயே சுமித்தின் (0) விக்கெட்டை பறிகொடுத்தாலும், அதன் பிறகு ஜெஸ்ஸி ரைடரும், மிதுன் மன்ஹாசும் அணியின் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரைடர் 31 ரன்களும், மன்ஹாஸ் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதை தொடர்ந்து உத்தப்பாவும், கேப்டன் யுவராஜ்சிங்கும் களமிறங்கினர்.

புனே வாரியர்ஸ் அணி 13.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. உத்தப்பா 22 ரன்களுடனும் (14 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), யுவராஜ்சிங் 21 ரன்களுடனும் (15 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

ஐபிஎல்4 மேலும் செய்திகள்

Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+