ஐபிஎல் இன்று... ஹைதராபாத் Vs ராஜஸ்தான்; கொச்சி Vs பெங்களூர்!!

முதல் போட்டி ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் ராஜாஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இந்தப் போட்டி துவங்குகிறது.
அணிகள் விவரம்:
இரண்டாவது போட்டி, கொச்சி டஸ்கர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே கொச்சியில் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
டெக்கன் சார்ஜர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்
கில்கிறிஸ்ட், சைமண்ட்ஸ் உள்பட எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளாமல், ஏலம் மூலம் வீரர்களை தேர்வு செய்து புதிய தோற்றத்துடன் காணப்படுகிறது டெக்கான் அணி. சங்கக்கரா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். குடலிறக்கத்திற்கு ஆபரேஷன் செய்து கொண்ட பீட்டர்சன் இந்த சீசனில் டெக்கான் அணியில் ஆடவில்லை. கேமரூன் ஒயிட் சில ஆட்டங்களுக்கு பிறகு அணியுடன் இணைந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், இஷாந்த் ஷர்மா, டுமினி, ஷகிர் தவான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா டெக்கான் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் வார்னே சக வீரர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் கில்லாடி. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன், வங்காளதேச தொடரில் பங்கேற்று இருப்பதால் சில ஆட்டங்களுக்கு பிறகு ஐ.பி.எல். அணியில் இணைவார்.
ராகுல் டிராவிட், ராஸ் டெய்லர் ஆகியோரின் அனுபவமும், ஜேக்கப் ஓரமின் அதிரடியும் அந்த அணிக்கு கைகொடுக்கும். மொத்தத்தில் முன்னாள் சாம்பியன்கள் வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்க கோதாவில் இறங்குகின்றன.
கொச்சி டஸ்கர்ஸ் Vs பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
டேனியல் வெட்டோரி தலைமையில் ஆட இருக்கும் பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசை மிரள வைக்கிறது. தில்ஷன், டிவில்லியர்ஸ், விராட் கோக்லி, சவுரப் திவாரி ஆகியோர் நின்று விட்டால் விசுவரூபம் எடுக்கக்கூடியவர்கள்.இதனால் புதியதாக ரூ.1533 கோடிக்கு வாங்கப்பட்டு அறிமுக அணியாக இறங்கும் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
கொச்சி டஸ்கர்ஸ் அணியை இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்ததனே வழி நடத்துகிறார். தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான பிரன்டன் மெக்கல்லமை கொச்சி அணி அதிகம் நம்பி இருக்கிறது.
உலக கோப்பையில் சொதப்பிய கேரள வீரர் ஸ்ரீசாந்த் உள்ளூரில் தனது திறமையை காட்ட முயற்சிப்பார். பந்து வீச்சில் ஆர்.பி.சிங், முரளிதரன், ரவீந்திர ஜடேஜா, வினய்குமார் ஆகியோர் டஸ்கர்ஸ் அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.
கொச்சி அணிக்கு இது முதல் ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications