தீபக் சாஹர் விலகல்.. புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யும் சிஎஸ்கே.. 5 வீரர்களுக்கு அடித்த லக்
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தீபக் சாஹருக்கு 2வது முறையாக காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நடப்பு சீசனில் தீபக் சாஹர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது அவர் தொடரை விட்டு விலகுகிறார்.
இதனால் அவருக்கு மாற்று வீரராக புதிய வீரர்களை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு சிஎஸ்கேவிற்கு கிடைத்துள்ளது. அதற்கு பிசிசிஐயின் விதியில் இடம் உள்ளது. தற்போது சிஎஸ்கே அணிக்கு முன் உள்ள வாய்ப்புகளை தற்போது காணலாம்.
Recommended Video

இஷாந்த் சர்மா
ஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக விளங்கிய இஷாந்த் சர்மாவுக்கு தற்போது போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் மெகா ஏலத்திலும் இஷாந்த் சர்மாவை எந்த அணியும் எடுக்கவில்லை. தற்போது தீபக் சாஹர் இல்லாததால் இஷாந்த் சர்மாவின் அனுபவம் நிச்சயம் சிஎஸ்கேவிற்கு கைக் கொடுக்கும். ஐபிஎல் வரலாற்றில் இஷாந்த் 84 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவான் குல்கர்னி
மும்பையை சேர்ந்த அனுபவ வீவரான குல்கர்னி இதுவரை ஐபிஎல் தொடரில் 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெரும்பாலான போட்டிகளில் மும்பை அணிக்காக குல்கர்னி விளையாடியுள்ளார். தற்போது அவரையும் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. மும்பையில் விளையாடிய அனுபவமும் இவருக்கு உள்ளதால் குல்கர்னி, சிஎஸ்கேவுக்கு நல்ல மாற்றத்தை தரலாம்.

ஸ்ரீசாந்த்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்தையும் யாரும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை. சமீபத்தில் ரஞ்சி போட்டியில் அவர் விளையாடிய போது அவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் ஸ்ரீசாந்த்தை கண்டிப்பாக அணியில் எடுக்கலாம். ஏனென்றால் தோனி ஸ்ரீசாந்த் ஜோடி இரண்டு முறை உலககோப்பையை வென்று தந்துள்ளது.

மோகித் சர்மா
சிஎஸ்கே அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான மோகித் சர்மா, இம்முறை மெகா ஏலத்தில் விலை போகவில்லை. பந்தை நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவர். தற்போது 33 வயதான இவர், நல்ல உடல் தகுதியுடன் உள்ளார். இதனால் சிஎஸ்கே இவரை மீண்டும் தீபக் சாஹருக்கு பதிலாக தேர்வு செய்யலாம்.

ஜி. பெரியசாமி
தமிழகத்தை சேர்ந்த 28 வயதான ஜி. பெரியசாமியை என்ன மாயம் என்று தெரியவில்லை, இதுவரை எந்த அணியும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை. மலிங்கா போல் பந்துவீசக்கூடிய பெரியசாமி, டி.என்.பி.எல். தொடரில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். தீபக் சாஹருக்கு பதில் இவரை சேர்த்தால் சிஎஸ்கே பட்டையை கிளப்பும்.


Click it and Unblock the Notifications