சென்னை: நடப்பு ஐபில்6-வது தொடரின் தொடக்கத்தில் பின் தங்கிய நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐ.பி.எல்.6வது தொடர் போட்டிகள் கடந்த 3-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 9 அணிகள் விளையாடி வருகிறது. நேற்று வரை 30 ஆட்டங்கள் முடிந்து உள்ளன

போட்டி தொடக்கத்தில் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்தங்கிய நிலையில் இருந்தது. தற்போது சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், சன் ரைசர்ஸ் ஹை தராபாத் அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்று உள்ளன. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் (+0.470), ஹைதராபாத் (-0.104) ஆகிய 2 அணிகளையும் பின் தள்ளிவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி (+0.648) முதலிடத்தை பிடித்துள்ளது..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்தில் மும்பையிடம் தோற்றது. அடுத்து பஞ்சாப், பெங்களூர் ஆகிய அணிகளை வீழத்தியது. அடுத்த ஆட்டத்தில் புனேயிடம் தோற்றது. அதன்பின் டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.