Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அபுதாபியில் இன்று 7 வது ஐ.பி.எல். போட்டிகள் தொடக்க விழா- மாதுரி, தீபிகா படுகோனே நடனம்

அபுதாபி: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 7 வது சீசன் தொடக்க விழா விருந்து நிகழ்ச்சி அபுதாபியில் இன்று இரவு நடைபெறுகிறது. இதில் பாலிவுட் நட்சந்திரங்களான மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கலக்கல் நடனம் இடம்பெறுகிறது.

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 7 வது சீசன் நாளை தொடங்குகிறது. இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடப்பதால் முதல் கட்ட (இருபது) லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களில் புதன்கிழமை முதல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

மே 2 முதல் இந்தியாவில்

மே 2 முதல் இந்தியாவில்

எஞ்சிய ஆட்டங்கள் இந்தியாவில் மே 2ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. அபுதாபியில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

விருந்தில் நடனம்

விருந்தில் நடனம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நாளான இன்று இரவு அபுதாபியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான இரவு விருந்து நடைபெறுகிறது.

உரிமையாளர்கள், வீர்ர்கள்

உரிமையாளர்கள், வீர்ர்கள்

இதில் எல்லா அணியின் வீரர்களுடன், உரிமையாளர்களும் கலந்து கொள்கிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், இந்தி நடிகையுமான ஷில்பா ஷெட்டி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், இந்தி நடிகையுமான பிரீத்தி ஜிந்தா ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

மாதுரி, தீபிகா

மாதுரி, தீபிகா

இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் இன்னிசை விருந்துடன், இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே ஆகியோர் இந்தி பாடல்களுக்கு நடனமாடி கலக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஷாருக்கான் நடனம்

ஷாருக்கான் நடனம்

இந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கானும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கவிழா ரத்து

தொடக்கவிழா ரத்து

வழக்கமாக ஐ.பி.எல். போட்டியின் தொடக்க லீக் ஆட்ட மோதலுக்கு முந்தைய நாளில் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறும். பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான 7-வது ஐ.பி.எல். போட்டியில் கோலாகலமான தொடக்க விழா நிகழ்ச்சி கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 15, 2014, 8:36 [IST]
Other articles published on Apr 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+