என் மகனுக்குப் பிரஷரே பிடிக்காது.. யுவராஜ் சிங் தாயார் ஷப்னம்
ஷார்ஜா: என் மகனுக்கு நெருக்கடியுடன் விளையாடுவது அறவே பிடிக்காது. எனவேதான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாட அவன் ஆர்வம் காட்டினான். இங்கு அனைத்து வீரர்களுமே கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறார்கள் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங்.
பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்கு முன்பு இந்தப் பேட்டியை அளித்திருந்தார் ஷப்னம்.
இப்போட்டியில் பெங்களூர் அணி படு தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரிய விலைக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங், ஒரே ஒரு போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் சோபிக்காமல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷப்னம் சிங் இதுகுறித்து பெங்களூர் அணியின் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து....

மகிழ்ச்சியில் யுவராஜ் சிங்
பெங்களூர் அணிக்காக தேர்வானது யுவராஜுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம், மகிழ்ச்சிக்குப் பெயர் போனது பெங்களூர் அணி என்பதால்.

எல்லோருமே ஜாலிப் பசங்க
பெங்களூர் அணி் வீரர்கள் அனைவருமே ஜாலியாக, கேஷுவலாக, விளையாட்டை ரசித்து விளையாடுபவர்களாக உள்ளனர்.

யுவிக்கு பிரஷர் பிடிக்காது
யுவிக்கும் நெருக்கடியே பிடிக்காது. நெருக்கடி இல்லாமல் விளையாடத்தான் அவனும் விரும்புவான்.

தனியா விட்ருவேன்
அவனுக்கு எப்போதெல்லாம் சோர்வு வருகிறதோ அப்போதெல்லாம் அவனை தனியாக விட்டு விடுவேன். அதுவே அவனை நார்மலாக்கி விடும்.

எடுத்துணர்த்துவேன்
கொஞ்சம் நார்மல் ஆன பிறகுதான் அவனிடம் செல்வேன். வெற்றியைப் போலவே, தோல்வியும், தொய்வும் ஒரு அங்கம்தான் என்பதை அவனுக்குப் புரிய வைப்பேன். அதன் பிறகு அவன் நார்மலாகி விடுவான். எல்லா தாயாரையும் போலத்தான் நானும்.

நானும் வழக்கமான தாய்தான்
எல்லாப் பெற்றோருமே குழந்தைகளை இப்படித்தான் அணுகுவார்கள். நானும் அப்படித்தான். அம்மாக்கள் பிள்ளைகளிடம் பாசத்தைக் கொட்டுவார்கள். அப்பாக்கள் கண்டிப்பார்கள். இது வழக்கமானதுதான்.


Click it and Unblock the Notifications