Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 7 ஏலம்.... இவங்கதாங்க முக்கியமானவர்களிலேயே ரொம்ப முக்கியமானவங்க!

பெங்களூர்: பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ள 7வது ஐபிஎல் வீ்ரர்கள் ஏலத்தில் முதலில் யுவராஜ் சிங் உள்ளிட்ட 16 வீரர்கள்தான் ஏலம் விடப்படவுள்ளனர்.

ஏலம் விடப்படவுள்ள அனைத்து வீரர்களின் பட்டியலையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் முதலில் ஏலம் விடப்படவுள்ள 16 பேரின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

இந்த 16 பேரில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் சிங், வீரேந்திர ஷேவாக் ஆகியோர் அடக்கம்.

2 நாள் ஏலம்

2 நாள் ஏலம்

ஐபிஎல் 7 ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 514 வீரர்கள்

மொத்தம் 514 வீரர்கள்

மொத்தம் 514 வீரர்கள் ஏலத்தில் விடப்படவுள்ளனர். இதில் அதிக அளவிலான வீரர்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

முக்கிய வீர்கள் 219

முக்கிய வீர்கள் 219

இதில் முக்கியமான, முன்னணி வீரர்கள் 219 பேர் ஆவர். இதில் 169 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் வெளிநாட்டு வீரர்கள்.

சாதாரண வீரர்கள் 292 பேர்

சாதாரண வீரர்கள் 292 பேர்

292 வீரர்கள் ஸ்டார் அந்தஸ்து பெறாதவர்கள். இதில் இந்தியர்கள் 255 பேர். 37 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

16 முக்கியஸ்தர்கள்

16 முக்கியஸ்தர்கள்

இந்த வீரர்களில் 16 பேர் முக்கியஸ்தர்கள் ஆவர். இவர்களைத்தான் முதலில் ஏலம் விடவுள்ளனர்.

விலை ஜாஸ்தி

விலை ஜாஸ்தி

இந்த 16 பேரின் அடிப்படை ஏலத் தொகையானது குறைந்தது ரூ. 1 கோடியாகும். அதிகபட்சம் 2 கோடியாகும்.

ஜெயவர்த்தனே முதல் டேரன் சமி வரை

ஜெயவர்த்தனே முதல் டேரன் சமி வரை

இதில் ரூ. 2 கோடியை அடிப்படைத் தொகையாக கொண்ட வீரர்களாக மஹளா ஜெய்வர்த்தனே, மிட்சல் ஜான்சன், ஜேக்கஸ் கல்லிஸ், கெவின் பீட்டர்சன், வீரேந்திர ஷேவாக்,. யுவராஜ் சிங், முரளி விஜய், ஜார்ஜ் பெய்லி, மைக்கேல் ஹஸ்ஸி, திணேஷ் கார்த்திக், பிரன்டன் மெக்கல்லம், அமீத் மிஸ்ரா ஆகியோர் உள்ளனர்.

ரூ. 1 முதல் ரூ. 152 வரையிலானவர்கள்

ரூ. 1 முதல் ரூ. 152 வரையிலானவர்கள்

ஜாகிர் கான், டேரன் சமிக்கு ரூ. 1 கோடியும், டேவிட் வார்னருக்கு ரூ. 1.50 கோடியும், பாப் டு பிளஸ்ஸிஸ்ஸுக்கு ரூ.1.52 கோடியும் அடிப்படைத் தொகையாக நிர்ணயித்துள்ளனர்.

Story first published: Friday, February 7, 2014, 14:23 [IST]
Other articles published on Feb 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+