7வது ஐ.பி.எல்.: இன்றாவது வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
அபுதாபி: நடப்பு 7வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி டேர்டெவில்ஸை எதிர்கொள்கிறது.
7 ஐ.பி. எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமது முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக 205 ரன்களைக் குவித்தது. ஆனால் சென்னை அணியின் இந்த இமாலய ஸ்கோரை அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சென்னைக்கு அதிர்ச்சி தோல்வியைக் கொடுத்தது.

சென்னை- டெல்லி மோதல்
இதைத் தொடர்ந்து அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் டோணி தலைமையிலான சென்னை அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

வெற்றி கணக்கு தொடங்குமா?
இன்றைய போட்டியிலாவது சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். கடந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங் நன்றாக இருந்த போதும் பந்துவீச்சு சொதப்பலாக இருந்தது. இன்றைய போட்டியில் அனைத்தையும் சென்னை அணி சரிகட்டிவிடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தினேஷ் கார்த்திக்
டெல்லி அணியைப் பொறுத்தவரையில் பீட்டர்சன் காயத்தில் இருந்து மீளாததால் தினேஷ் கார்த்திக் தலைமையிலேயே அணி விளையாடுகிறது.

ஒரு வெற்றி..
முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸிடம் தோல்வி அடைந்தாலும், கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற்றது.
இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் சென்னை அணியை எதிர்த்து டெல்லி களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications