7வது ஐ.பி.எல்.: பெங்களூருவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி!
ஷார்ஜா: 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகின்றன. இதில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காலிஸ் 43 ரன்களில் அவுட் ஆனார்.

ஹாட்ரிக் முட்டை காம்பீர்..
அந்த அணியின் கம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அவர் தொடர்ந்து 3 போட்டிகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை.

லின் 45 ரன்கள்..
அதன் பின் அந்த அணியின் பாண்டே 5 ரன்கள், லின் 45 ரன்கள் எடுத்தனர்.

பதான் முட்டை
இர்பான் பதான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். உத்தப்பா 22 ரன்களையும் வினய் குமார் 4 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். எஸ்.ஏ. யாதவ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவரில் 150 ரன்கள்
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 150 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி வெற்றி பெற 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சீரான பெங்களூர் ஆட்டம்
அதன்பின்பு ஆடிய பெங்களூர் அணியின் வீரர்களில் படேல் 21 ரன்களையும் டகவாலே 40 ரன்களையும் எடுத்தனர்.

கோஹ்லி, யுவி 31 ரன்கள்
பெங்களூர் அணியின் விராத் கோஹ்லி 31 ரன்களையும் யுவராஜ் 31 ரன்களையும் எடுத்தனர். வில்லியர்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2 ரன்2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..
பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி ஓவர் மிக பரபரப்பாக இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications