Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல்: ராஞ்சியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி!

8 அணிகள் இடையிலான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வந்தது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்றிரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

கொல்கத்தா அணியில் மோர்னே மோர்கல், பிஸ்லா நீக்கப்பட்டு ஆந்த்ரே ரஸ்செல், யூசுப் பதான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டு நீண்ட நேரம் பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

சென்னையின் வெய்ன் சுமித்தும், பிரன்டன் மெக்கல்லமும் வழக்கம் போல் அதிரடியாக சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். வெய்ன் சுமித் 16 ரன்களில் ஷகிப் அல்-ஹசனின் சுழலில் எல்.பி.டபிள்யூ. அவுட் ஆனார்.

ரெய்னா 31 ரன்கள்

ரெய்னா 31 ரன்கள்

அடுத்து மெக்கல்லத்துடன், சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். ஈரப்பதம் காரணமாக பேட் செய்வதில் சிரமம் ஏற்பட்ட போதிலும் இருவரும் ஸ்கோரை முடிந்த வரை வேகமாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 90 ரன்களை தொட்ட போது, ரெய்னா 31 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மெக்கல்லம் 56 ரன்கள்.

மெக்கல்லம் 56 ரன்கள்.

இதைத் தொடர்ந்து உள்ளூர் நாயகன் டோணி ஆட வந்தார். இதனிடையே இந்த தொடரில் 3-வது அரைசதத்தை பூர்த்தி செய்த பிரன்டன் மெக்கல்லம் 56 ரன்களில் அவுட் ஆனார்.

3 விக்கெட்டுக்கு 148 ரன்கள்..

3 விக்கெட்டுக்கு 148 ரன்கள்..

அதன் பின்னர் டோணியுடன் ரவீந்திர ஜடேஜா ஆட இணைந்தார், இருவரும் தலா ஒரு சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினர் 17 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. டோணி 22 ரன்களுடனும் ஜடேஜா 17 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

தடுமாறிய கொல்கத்தா

தடுமாறிய கொல்கத்தா

பின்னர் 149 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடியது. ஈஸ்வர் பாண்டே வீசிய 2-வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டி அமர்க்களப்படுத்திய கொல்கத்தாவின் உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கேப்டன் கவுதம் கம்பீர் தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக, வீழ்ச்சி ஆரம்பமானது.

சென்னை அணி வெற்றி

சென்னை அணி வெற்றி

இதன் பின்னர் சென்னை சுழற்பந்து வீச்சாளர்கள், கொல்கத்தா பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். கொல்கத்தா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

5-வது வெற்றி

5-வது வெற்றி

6-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். அதே சமயம் 6-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 4-வது தோல்வியாகும்.

Story first published: Saturday, May 3, 2014, 9:39 [IST]
Other articles published on May 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+