Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல். கிரிக்கெட்: கை கொடுக்காத யுவியின் விஸ்வரூபம்! ராஜஸ்தானிடம் வீழ்ந்தது பெங்களூர்!!

பெங்களூர்: 7வது ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றியை பெற்றது.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர் கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கெய்ல் சோபிக்கலையே..

கெய்ல் சோபிக்கலையே..

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி 4 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 19 ரன்னிலும், இந்திய ஜூனியர் கேப்டன் விஜய் ஜோல் 16 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் பெங்களூர் அணி 3 விக்கெட்டுக்கு 40 ரன்களுடன் தடுமாறியது.

யுவி விஸ்வரூபம்

யுவி விஸ்வரூபம்

இந்த இக்கட்டான சூழலில் 4-வது விக்கெட்டுக்கு யுவராஜ்சிங்கும், டிவில்லியர்சும் கைகோர்த்து அதகளப்படுத்தினர். ரூ.14 கோடி மதிப்புக்கு ஏற்ப ஆடாததால் நெருக்கடியில் சிக்கி தவித்த யுவராஜ்சிங், தன் மீதான விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலடி கொடுத்தார். டிவில்லியர்சும், வழக்கம் போல் ரன்வேட்டையாடி ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

யுவராஜ் 83 ரன்கள்

யுவராஜ் 83 ரன்கள்

அணியின் ஸ்கோர் 172 ரன்களாக உயர்ந்த போது யுவராஜ்சிங் 83 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் யுவராஜ்சிங்கின் அதிகபட்சம் இதுவாகும்.

டிவில்லியர்ஸ் 58 ரன்கள்

டிவில்லியர்ஸ் 58 ரன்கள்

டிவில்லியர்ஸ் (58 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

190 ரன்கள் குவிப்பு

190 ரன்கள் குவிப்பு

20 ஓவர்களில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. கடைசி 12 ஓவர்களில் மட்டும் 120 ரன்களை திரட்டினர்.

செம தடுமாற்றம்

செம தடுமாற்றம்

பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தானுக்கு ரஹானே, கருண் நாயர் நல்ல தொடக்கம் தந்த போதிலும் ஷேன் வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தனர். 106 ரன்னுக்குள் 5 விக்கெட் விழுந்ததால் ராஜஸ்தான் அணி ஊசலாடியது.

நிமிர்த்திய ஸ்மித்

நிமிர்த்திய ஸ்மித்

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவன் சுமித்தும், ஜேம்ஸ் பவுல்க்னெரும், 36 பந்துகளில் 83 ரன்கள் தேவைப்பட்ட போதிலும் அடித்து நொறுக்கி பெங்களூருக்கு அதிர்ச்சி அளித்தனர்.

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவன் சுமித் 48 ரன்களுடனும் பவுல்க்னெர் 41 ரன்களுடனும் களத்தில் நின்றனர். ராஜஸ்தானுக்கு இது 6-வது வெற்றியாகும். பெங்களூருக்கு 6-வது தோல்வியாகும்.

Story first published: Monday, May 12, 2014, 9:06 [IST]
Other articles published on May 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+