7 வது ஐபிஎல்: அணிகளில் நீடிக்கும் வீரர்கள் யார்? யார்? முழு பட்டியல்
மும்பை: 7வது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகியவை தலா 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
7வது ஐபிஎல் போட்டி வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் முந்தைய சீசனில் விளையாடிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி மட்டும் எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை என அறிவித்துவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
டோணி, அஸ்வின், ஜடேஜா, பிராவோ, ரெய்னா

மும்பை இந்தியன்ஸ் அணி
ரோகித் ஷர்மா, மலிங்கா, ராயுடு, ஹர்பஜன்சிங், பொல்லார்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
வாட்சன், சாம்சன், பின்னி, ரஹானே, ஃபால்க்னர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கோஹ்லி, டிவில்லியர்ஸ், கெய்ல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஸ்டெய்ன், தவான்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்
டேவிட் மில்லர், வோரா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கவுதம் காம்பீர், நரைன்

டெல்லி டேர்டெவில்ஸ்
ஷேவாக் உட்பட எவரும் இல்லை.


Click it and Unblock the Notifications