Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல்.: டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்

டெல்லி: 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வீழ்த்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 32வது போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காக் 7 ரனகளிலும் பீட்டர்சன் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கார்த்திக் 39 ரன்கள்

கார்த்திக் 39 ரன்கள்

அதன்பின்பு ஆடிய அகர்வால் 25 ரன்கள், கார்த்திக் 39 ரன்கள், சுக்லா 21 ரன்கள் எடுத்தனர்.

4 ரன்னில் டுமினி அவுட்

4 ரன்னில் டுமினி அவுட்

டுமினி 4 ரன்களிலும் ஜாதவ் 5 ரன்களிலும் ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் சுக்லா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள்

7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள்

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி 143 ரன்கள் எடுத்தது.

குறுக்கிட்ட மழை

குறுக்கிட்ட மழை

பின்னர் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த போது அடிக்கடி மழையால் ஆட்டம் தடைபட்டது.

டக்வொர்த்-லீவிஸ் முறை

டக்வொர்த்-லீவிஸ் முறை

அதனால் டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி ஹைதராபாதுக்கு வெற்றி இலக்காக 5 ஓவர்களில் 43 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாத் வெற்றி

4.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் என்ற இலக்கை எட்டி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இத்தோல்வியினால் அடுத்த சுற்று வாய்ப்பை டெல்லி டேர்டெவில்ஸ் அணி இழந்தது.

Story first published: Sunday, May 11, 2014, 10:05 [IST]
Other articles published on May 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+