சாதிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?
சென்னை: ஐ.பி.எல். அணிகளிலேயே சிறந்த அணியாக இப்போது சர்ச்சைகளில் சிக்கியிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணிதான் அந்த அணியின் வெற்றிகளுக்கு காரணமானவர்..
சென்னை சூப்பர்கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் டோணி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, ப்ராவோ, அஸ்வின், என வெற்றிக் கூட்டணி தொடர்கிறது. இந்த அணியில் மெக்கல்லம், ஸ்மித் ஆகியோரும் கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

வெளிநாட்டு வீரர்கள்..
சென்னை அணியில் மொத்தம் 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். 4 ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்.

2008-ல் 2வது இடம்
முதலாவது ஐ.பி.எல். போட்டியில் 2வது இடத்துக்கு வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2வது ஐ.பி.எல். போட்டியில் அரை இறுதி வரைக்கும் போனது.

2010,11-ல் சாம்பியன்
பின்னர் 2010, 11ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

2012, 13ல் 2வது இடம்
கடந்த 2012,13ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது இடத்துக்கு வந்தது.


Click it and Unblock the Notifications