தீராத கேலரி பஞ்சாயத்து... 4 ஐ.பி.எல் போட்டிகள் சென்னையிலிருந்து டோணி சொந்த ஊருக்கு
சென்னை: சென்னையில் நடைபெறவிருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் இம்முறை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். சீசன் 7 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மே 18ஆம் தேதி சென்னை அணியும், பெங்களூரு அணியும் சென்னையில் விளையாட இருந்தன.
அதேபோல், 22ஆம் தேதி சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் சென்னையில் விளையாட இருந்தன.

அரையிறுதிப்போட்டி
மேலும், மே 27 மற்றும் 28ஆம் தேதிகளில் ஐ.பி.எல். அரையிறுதி போட்டியும் சென்னையில் நடைபெற இருந்தது.

ராஞ்சியில் நடைபெறும்
இந்நிலையில் இந்த 4 ஐ.பி.எல். போட்டிகளும் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேடியம் வழக்கு
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கேலரிகள் திறப்பு பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இலங்கை வீரர்கள்
மேலும் இலங்கை வீரர்கள் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே 4 போட்டிகளும் சென்னையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications