Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'ஜஸ்ட்' 20 லட்சத்துக்கு விற்றுப் போன ஸ்ரீகாந்த் மகன்.. !

பெங்களூர்: இன்று தொடங்கிய 2வது நாள் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருத்தா ஸ்ரீகாந்த் வெறும் 20 லட்சத்துக்கு விலை போனார்.

இதுவரை அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது அவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விலைக்கு வாங்கியுள்ளது.

IPL 7 Player Auction Day 2: List of sold players

இந்த அணியில்தான் மென்டார் ஆக இருந்து வருகிறார் ஸ்ரீகாந்த் என்பது நினைவிருக்கலாம். அதாவது அப்பா அணிக்கே போய் விட்டார் மகன் அனிருத்தா ஸ்ரீகாந்த்.

முன்பு சென்னை அணியின் பிராண்ட் அம்பாசடராகவும் இருந்தார் ஸ்ரீகாந்த் என்பது நினைவிருக்கலாம்.

2வது நாள் ஏலத்தில் விலை போனவர்கள்

இன்றைய 2வது நாள் ஏலத்தில் அதி முக்கியம் இல்லாத வீரர்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றனர்.

மணீஷ் பாண்டேவுக்கு ரூ. 1.7 கோடி

மணீஷ் பாண்டேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 1.7 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

குர்கீரத் சிங்

குர்கீரத் சிங்கை ரூ. 1.13 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியது.

சென்னைக்கு பாபா அபராஜித்

பாபா அபராஜித்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 10 லட்சத்துக்கு வாங்கியது.

அனிருத்தா ஸ்ரீகாந்த்

அனிருத்தா ஸ்ரீகாந்த் ரூ. 20 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.

விஜய் ஸோல்

ரூ. 30 லட்சத்துக்கு விஜய் ஸோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்.

உன்முக்த் சந்த்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உன்முக்த் சந்த்தை ரூ. 65 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

மன்விந்தர் பிஸ்லா

மன்விந்தர் பிஸ்ரா ரூ. 60 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் விலை போனார்.

Story first published: Thursday, February 13, 2014, 12:52 [IST]
Other articles published on Feb 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+