Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 7 ஏலம்.. ரூ. 60 கோடியுடன் வீரர்களை அள்ளிக் கொள்ள வருகிறது டெல்லி டேர்டெவில்ஸ்!

பெங்களூர்: ஐபிஎல் 7 ஏலம் தொடங்கப் போகிறது. இந்த ஏலத்தில் அதிக பணத்துடன் கலந்து கொள்ளப் போகும் ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ்தான்.

இந்த அணி இந்த ஆண்டு போட்டிக்கு தனது பழைய வீரர்கள் யாரையுமே தக்க வைத்துக் கொள்ளவில்லை. புதிதாக வீரர்களை எடுக்கப் போகிறது.

முற்றிலும் புது அணியுடன் இந்த ஆண்டு தொடரை சந்திக்க டெல்லி முடிவெடுத்துள்ளதால், தனது பழைய வீரர்களை தூக்கிப் போட்டு விட்டது. அதேசமயம், 7 அணிகள் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் சிலரை தக்க வைப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டன.

இனிமேல் ஷேவாக் இல்லை

இனிமேல் ஷேவாக் இல்லை

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் கெவின் பீட்டர்சன், டேவிட் வார்னர், வீரேந்திர ஷேவாக் போன்ற பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இருந்தனர். ஆனால் யாருமே வேண்டாம் என்று டெல்லி அணி முடிவெடுத்து விட்டது.

ஷேவாக்கால் ஒரு யூஸும் இல்லை

ஷேவாக்கால் ஒரு யூஸும் இல்லை

ஷேவாக் சுத்தமாக பார்மில் இல்லை. போன வருடத்துப் போட்டியில் பெரும் சொதப்பலே அவர்தான்.

புதிதாக வரப் போவது யாரோ...

புதிதாக வரப் போவது யாரோ...

டெல்லி வீரர் ஷேவாக்கையே டெல்லி அணி வேண்டாம் என்று முடிவு செய்து விட்டதால் டெல்லி அணியில் யார் வரப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிப்ரவரி 12, 13ல் ஏலம்

பிப்ரவரி 12, 13ல் ஏலம்

ஐபிஎல் 7 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது.

அதிகபட்ச நிதியுடன் டெல்லி

அதிகபட்ச நிதியுடன் டெல்லி

பழைய வீரர்களை தூக்கிப் போட்டு விட்டதால் கை நிறையப் பணத்துடன் டெல்லி அணி ஏலத்திற்கு வருகிறது.

அதிக பணத்தை செலவழித்த சென்னை

அதிக பணத்தை செலவழித்த சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை தலா ஐந்து வீரர்களை நடப்பு தொடருக்குத் தக்க வைத்துள்ளன. இதற்காக பெருமளவிலான பணத்தை அவை செலவிட்டு விட்டன. எனவே குறைந்த பணத்துடன் ஏலத்திற்கு வருகின்றன.

ரூபாயில் வீரர்களை வாங்கப் போறாங்க

ரூபாயில் வீரர்களை வாங்கப் போறாங்க

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த முறை ரூபாயில் வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. முன்பு அமெரிக்க டாலரில்தான் ஏலம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.

ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்சம் ரூ. 60கோடி

ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்சம் ரூ. 60கோடி

ஒவ்வொரு அணிக்கும் ஊதிய தொகையாக அதிகபட்சம் ரூ. 60 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

60 கோடியுடன் டெல்லி

60 கோடியுடன் டெல்லி

டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 60 கோடியுடன் களம் குதிக்கிறது.

2வது பெரிய தொகை பஞ்சாப்பிடம்

2வது பெரிய தொகை பஞ்சாப்பிடம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் அடுத்த அதிகபட்ச தொகையாக ரூ. 43.5 கோடி உள்ளது. கொல்கத்தாவிடம் ரூ. 38 கோடியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடமும் அதே அளவிலான தொகையும் உள்ளது.

பெங்களூரிடம் ரூ. 30.5 கோடி

பெங்களூரிடம் ரூ. 30.5 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் ரூ. 30.5 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸிடம் ரூ. 22.5 கோடியும் உள்ளது.

சென்னையிடம் ரூ. 21 கோடி

சென்னையிடம் ரூ. 21 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ. 21 கோடி உள்ளது. மும்பை இந்தியன்ஸும் ரூ. 21 கோடியுடன் வருகிறது.

Story first published: Monday, January 13, 2014, 18:39 [IST]
Other articles published on Jan 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+