Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாகப் போகிறாரோ 'சின்னச்சாமி'.. இன்று கெய்ல், மேக்ஸ்வெல் மோதலைக் காணத் தவறாதீர்!

பெங்களூர்: இதோ வந்து விட்டது.. இதுதான் போட்டி.. என்று கூறும் அளவுக்கு இன்று அனல் பறக்கும் ஒரு அதி பயங்கர போட்டியை ஐபிஎல் காணவுள்ளது.

ஒருபக்கம் விராத் கோஹ்லி, கிறிஸ் கெய்ல்.. மறுபக்கம் கிளன் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர்.. எப்படி இருக்கும் இந்த மோதல்.. இன்று பெங்களூரில் அதுதான் நடக்கப் போகிறது.

ஏற்கனவே மேக்ஸ்வெல்லிடம் சிக்கி பெரிய பெரிய அணிகள் எல்லாம் படாதபாடு பட்டுக் கொண்டுள்ளன. இந்த நிலையில் கெய்ல் புயலும், மேக்ஸ்வெல் சூறாவளியும் சந்திக்கப் போகின்றன. வெல்லப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது.

பவர் ஸ்டார்கள்..

பவர் ஸ்டார்கள்..

பெங்களூர் அணியின் பவர் பேக்ட் ஹீரோ கெய்ல்தான். அதேபோல பஞ்சாபின் சூப்பர் பவர் ஸ்டாராக மேக்ஸ்வெல் கலக்கிக் கொண்டிருக்கிறார். இருவரில் யார் இன்று வெளுத்து வாங்கப் போவது என்பதுதான் பெரிய கேள்வியாகும்.

பஞ்சாப் - பெங்களூர்

பஞ்சாப் - பெங்களூர்

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதவுள்ளன. இப்போட்டியில் சூட்டுக்கு சற்றும் பஞ்சமிருக்காது என்று நம்பலாம்.

மழை வரலாமாம்

மழை வரலாமாம்

இருப்பினும் போட்டியின் இடையே மழை வரும் அபாயம் இருக்கிறது. எனவே இரு அணியினரும் கவலையில் உள்ளனர். குறிப்பாக ரசிகர்கள் எங்கே மேக்ஸ்வெ்ல் கெய்ல் ஆட்டத்தைப் பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற டென்ஷனில் உள்ளனர்.

செமத்தியான பேட்டிங் ஸ்டார்கள்

செமத்தியான பேட்டிங் ஸ்டார்கள்

இரு அணிகளிலுமே செமத்தியான பேட்டிங் ஸ்டார்கள் உள்ளனர். பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், மில்லர் போக ஷேவாக், கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஆகியோரும் உள்ளனர். ஷேவாக்கும் சற்று பரவாயில்லை ரகமாகத்தான் ஆடி வருகிறார். நிலைத்து ஆட முயற்சிக்கிறார். மற்ற மூன்று பேரும் பட்டையைக் கிளப்புகின்றனர்.

இந்தப் பக்கம் அதுக்கு மேல இருக்கே

இந்தப் பக்கம் அதுக்கு மேல இருக்கே

பெங்களூர் அணியும் சும்மா இல்லை. கெய்ல், கோஹர்லி, ஆப் டி வில்லியர்ஸ் ஆகியோர் அபாரமான ஆட்டக்காரர்கள். பார்த்திவ் படேல் சத்தம் போடாமல் நிலைத்து நின்று ஆடக் கூடியவர்.

நல்லாத்தான் ஆரம்பித்தது...

நல்லாத்தான் ஆரம்பித்தது...

பெங்களூர் அணியில் ஆரம்பத்தில் கெய்ல் ஆடவில்லை. இருந்தும் 2 போட்டிகளில் பெங்களூர் வென்றது. ஆனால் அடுத்து 3 போட்டிகளில் தொடர்ந்து தோற்றது. இதையடுத்து இந்தியாவில் நடந்த போட்டிகளில் ஹைதராபாத்தை வென்றுள்ளது. மும்பையிடம் தோற்றுள்ளது.

ஒரே ஒரு தோல்வியுடன் பஞ்சாப்

ஒரே ஒரு தோல்வியுடன் பஞ்சாப்

மறுபக்கம் பஞ்சாப் அணி அமீரகத்தில் நடந்த ஐந்து போட்டிகளிலும் அசத்தலாக வென்றது. இந்தியா வந்த பின்னர் மும்பையிடம் தோற்றது. ஆனால் சென்னையை அதிரடியாக வென்றது. பட்டியலில் முதலிடத்திலும் உள்ளது.

யுவராஜ் ஏதாச்சும் செய்தாகனும்

யுவராஜ் ஏதாச்சும் செய்தாகனும்

ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங் இதுவரை பெரிதாக சாதிக்கவில்லை. இது அவரை விட அவரது முதலாளி விஜய் மல்லையாவுக்குத்தான் பெரும் வயிற்றுக் கடுப்பைக் கொடுக்கும் விஷயமாகும. அவர் ஏதாவது செய்தால்தான் உண்டு. ஆட முயற்சிக்க வேண்டும். பஞ்சாபை ஆட்டிப்படைக்க வேண்டும். அது அவசியமானது.

மேக்ஸ்வெல்.. மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்.. மேக்ஸ்வெல்

இத்தனை இருந்தும் அத்தனை பேர் கண்களும் மேக்ஸ்வெல் மீதுதான் உள்ளது. என்ன அடி அடிக்கப் போகிறாரா.. சின்னச்சாமியை என்ன செய்யப் போகிறாரா என்துதான் அனைவரின் பீதி கலந்த எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த முறையாவது அவர் சதம் போடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது.

விஸ்வரூபம் பார்ட் டூ...

விஸ்வரூபம் பார்ட் டூ...

மேக்ஸ்வெல்லுக்குப் போட்டியாக கெய்லும் இன்று விஸ்வரூபம் எடுத்தால் அது விஸ்வரூபம் பார்ட் டூவாகத்தான் இருக்கும். மொத்தத்தில் ரசிகர்களுக்கு இன்று நல்ல விருந்து கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் ராத்திரி 8 மணிக்கு போட்டியைக் காணத் தயராவோம்....

Story first published: Friday, May 9, 2014, 16:53 [IST]
Other articles published on May 9, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+