Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 7.. இன்று தொடங்குகிறது 2வது ரவுண்டு... ராஞ்சியில் மோதும் சென்னை -கொல்கத்தா!

ராஞ்சி: 7வது ஐபிஎல் தொடரின் 2ம் பாகம் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. முதல் போட்டி ராஞ்சியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.

7வது தொடரின் முதல் பாகம் 20 போட்டிகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தேறியது.

இதில் 5 போட்டிகளிலும் அபாரமாக வென்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலிடத்தைப் பிடித்தது. ஐந்திலும் தோற்று மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.

2வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இந்த அணி இன்று 4வது இடத்தில் இருக்கும் கொல்கத்தாவை ராஞ்சியில் சந்திக்கிறது. ராஞ்சி, டோணியின் சொந்த ஊராகும்.

முதலில் தோல்வி.. அடுத்தடுத்து அதிரடி

முதலில் தோல்வி.. அடுத்தடுத்து அதிரடி

சென்னை அணி தனது முதல் போட்டியில் சூப்பராக ரன் குவித்தும் கூட பஞ்சாபிடம் தோற்றுப் போனது. அதேசமயம் கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் அபாரமாக வென்றும் அடுத்தடுத்து நிலை தடுமாறியது.

3 தோல்வி - 2 வெற்றிகளுடன் கொல்கத்தா

3 தோல்வி - 2 வெற்றிகளுடன் கொல்கத்தா

கொல்கத்தா அணி 3 தோல்விகள் மற்றும் 2 வெற்றிகளுடன் தனது 2வது அத்தியாயத்தைத் தொடங்குகிறது. சென்னையோ ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் தெம்பாக களம் காண்கிறது.

சூப்பர் தல

சூப்பர் தல

இரு அணிகளின் கேப்டன்களிலும் டோணியே சிறந்தவராக இருக்கிறார். கடந்த 6 தொடர்களிலும் நிறைய வெற்றிகளுடன் அணியை சிறப்பாக வழிநடத்தியவர் அவர்.

டக் அவுட் கம்பீர்

டக் அவுட் கம்பீர்

ஆனால் கம்பீர் தடுமாறுகிறார். நடப்புத் தொடரில் அடுத்தடுத்து முட்டை வாங்கி திணறிப் போய் விட்டார். கேலிக்குள்ளானார்.

பேட்டிங் திறமை

பேட்டிங் திறமை

கொல்கத்தா அணியில் காலிஸ் நல்ல பார்மில் உள்ளார். மணீஷ் பாண்டே, பிஸ்லா, சூர்யகுமார் யாதவும் கை கொடுப்பார்கள். கம்பீர் பார்முக்கு வந்து விட்டால் அணி ஸ்டிராங்காகி விடும். சுனில் நரீன் பந்து வீச்சில் ஜொலிக்கிறார். இவர்கள் தவிர மார்னி மார்க்கல், ஷாகிப் அல் ஹசன், பியூஷ் சாவ்லா ஆகியோர் பந்து வீச்சில் பரவாயில்லை.

தெம்பாக காணப்படும் சென்னை

தெம்பாக காணப்படும் சென்னை

மறுபக்கம் சென்னை அணி சிறப்பாகவே உள்ளது. பிராவோ இல்லாத நிலையில் மெக்கல்லம் அதிரடியாக ஆடி வருகிறார். அதேபோல வேயன் ஸ்மித் தொடக்கத்திலிருந்தே கலக்கி வருகிறார்.

ரெய்னா - டோணி

ரெய்னா - டோணி

ரெய்னா, பாப் டு பிளஸ்ஸிஸ், டோணி ஆகியோரும் தக்க சமயத்தில் கை கொடுக்கக் காத்துள்ளனர். ரவீந்திர ஜடேஜா தனது இரு பணிகளையும் ஓரளவு நன்றாகவே செய்து வருகிறார்.

அசத்தல் ஈஸ்வர் பாண்டே

அசத்தல் ஈஸ்வர் பாண்டே

ஈஸ்வர் பாண்டே பந்து வீச்சில் அசத்துகிறார். மோஹித் சர்மாவும் இருக்கிறார். அஸ்வினும் உதவிக் கரம் நீட்ட ரெடியாக உள்ளார்.

இன்று ராத்திரி 8 மணிக்கு

இன்று ராத்திரி 8 மணிக்கு

இன்று இரவு 8 மணிக்கு இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. சென்னை தொடர்ந்து அதிரடி நடை போடுமா அல்லது கொல்கத்தா மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Friday, May 2, 2014, 15:16 [IST]
Other articles published on May 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+