நாக்பூர்: 7வது ஐபிஎல் போட்டிகள் எங்கே நடைபெறும் என்பது பற்றி வரும் 5-ந் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவரான ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
7வது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் காலகட்டத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து பாதி போட்டிகளை இந்தியாவிலும் சில போட்டிகளை தென்னாப்பிரிக்காவிலும் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில் நாக்பூரில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா, வரும் 5-ந் தேதி இதுபற்றிய முடிவு அறிவிக்கப்படும். போட்டிகள் எங்கே நடைபெறும் என்பதை கிரிக்கெட் வாரியத் தலைவர்தான் அறிவிப்பார் என்று கூறினார்.