ரொம்பத் தேடப்பட்ட கோஹ்லி... 2வது இடம்தான் டோணிக்கு!
டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் கூகுள் சர்ச்சில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் வீரர் என்ற பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பெறுகிறார்.
2வது இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி பெற்றுள்ளார்.
பெங்களூர் அணியின் யுவராஜ் சிங்குக்கு தேடப்பட்டோர் பட்டியலில் 3வது இடம் கிடைத்துள்ளது.

4வது இடத்தில் கிறிஸ் லின்
பெங்களூருக்கு எதிரான போட்டியின் போது பவுண்டரி லைனுக்கு முன்பு வைத்து மின்னல் வேகத்தில் கேட்ச் பிடித்து சாகசம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின் 4வது இடத்தில் இருக்கிறார்.

ஷேவாக்கையும் தேடிருக்காங்களே
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரேந்திர ஷேவாக் களத்தில் இன்னும் அதிரிபுதிரியாக ஆடவில்லை. ஆனாலும் அவரையும் நிறைய பேர் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அவர் 5வது இடத்தில் இருக்கிறார்.

கம்பீர் - மேக்ஸ்வெல்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல், கொல்கத்தா கேப்டன் கம்பீர் ஆகியோருக்கும் டாப் 10 வரிசையில் இடம் கிடைத்துள்ளது.

கெய்ல் - ரெய்னா- தவன்
மேலும் கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவன் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

கோச்சுக்கு வந்த புகழைப் பாருங்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றி நடைக்கு அதன் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்தான் காரணம் எனறு கூறப்படுகிறது. இவரையும் கூகுள் சர்ச்சில் அதிகம் பேர் தேடிப் பார்த்துள்ளனர்.
பாங்கர் மட்டுமே நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரே இந்தியப் பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications