Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது!

டெல்லி: ஏழாவது ஐ.பி.எல். போட்டிகளை துபாய், வங்காளதேசம், இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

16வது லோக்சபா தேர்தலும், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒரே நேரத்தில் வருவதால், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் தேர்தல் முடியும் வரை அதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

IPL 7 will be held in UAE, Bangladesh and India

இதனால் 7-வது ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது, எந்த தேதியில் நடத்துவது என்பதில் குழப்பம் நீடித்தது. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது பி.சி.சி.ஐ. 7-வது ஐ.பி.எல். போட்டியை துபாய், வங்காளதேசம், இந்தியாவில் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐ.பி.எல். போட்டி முதலில் துபாயில் தொடங்கும் என்றும், பின்னர் போட்டிகள் வங்காள தேசத்தில் நடைபெறும் என்றும் இறுதியாக போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, March 12, 2014, 14:30 [IST]
Other articles published on Mar 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+