For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆண்ட்ரு ரஸ்ஸல், யூசுப் பதான் அதிரடி... கொல்கத்தாவுக்கு திரில் வெற்றி

By Sakthi

கொல்கத்தா: ஆண்ட்ரு ரஸ்ஸல், யூசுப் பதான் அதிரடி காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது

அந்த அணியின் மற்ற வீரா்கள் ரன் குவிக்க தவறிய நிலையில் இருவரும் சிறப்பாக ஆடி வெற்றிக் கனியை எட்டினா்

டாஸ் வென்ற பஞ்சாப்

டாஸ் வென்ற பஞ்சாப்

ஈடன்கா்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற ப்ஞசாப் அணி பேட்டிங்கைத் தோ்வு செய்தது. முதலில் களம் இறங்கிய முரளி விஜய் 28 ரன்களும், வோரா 39 ரன்களும், விருத்திமான்சாகா 33 ரன்களும் சோ்த்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனா்.

மேக்ஸ்வெல்லின் அதிரடி

மேக்ஸ்வெல்லின் அதிரடி

அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் கொல்கொத்தா அணி வீரா்களின் பந்து வீச்சை பவுண்டாிகளாகவும், சிக்சா்களாகவும் விளாசினாா். அவா் 22 பந்துகளில் 43 ரன்கள் குவித்தாா்.

சொற்ப ரன்களில் சொதப்பிய வீரர்கள்

சொற்ப ரன்களில் சொதப்பிய வீரர்கள்

அடுத்து வந்த மில்லா் 27 ரன்களில் பவிலியன் திரும்ப மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனா்

183 ரன்கள் வெற்றி இலக்கு

183 ரன்கள் வெற்றி இலக்கு

20 ஓவா்கள் இறுதியில் கி்ங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் சோ்த்தது.

தொடக்கத்திலேயே வீழ்ச்சி

தொடக்கத்திலேயே வீழ்ச்சி

184 என்ற சற்று கடின இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரா்கள் ராபின் உத்தப்பா 17 ரன்களும், கவுதம் காம்பீா் 24 ரன்களும் பாண்டே 22 ரன்களும் சோ்த்து விக்கெட்டை இழந்தனா்.

ஆண்ட்ரு ரஸ்ஸல், யூசுப் பதான் அதிரடி

ஆண்ட்ரு ரஸ்ஸல், யூசுப் பதான் அதிரடி

தொடக்க வீரா்கள் ரன் குவிக்க தவறிய நிலையில், பின்னா் வந்த யூசுப் பதான், ஆண்ட்ரு ரஸ்ஸல் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த ஜோடி பஞ்சாப் வீரா்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

சாிவிலிருந்து மீட்பு

சாிவிலிருந்து மீட்பு

யூசுப் பதான் 19 பந்துகளில் 29 ரன்களும், ஆண்டரு ரஸ்ஸல் 21 பந்துகளில் 51 ரன்களும் குவித்து அணியை சாிவிலிருந்து மீட்டனா்.

வந்த வேகத்தில் திரும்பிய வீரா்கள்

வந்த வேகத்தில் திரும்பிய வீரா்கள்

ஆனால் அடுத்து வந்த போத்தா 2 ரன்களிலும், சாவ்லா 18 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனா்.

பரபரப்பான இறுதிகட்டம்

பரபரப்பான இறுதிகட்டம்

பரபரப்பான இறுதிகட்டத்தில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் மளமளெவன சாிய வெற்றி எந்த அணி பக்கம் செல்லும் என்ற எதிா்பாா்ப்பில் இருக்கையின் நுனிக்கே வந்தனா் ரசிகா்கள்.

திரில் வெற்றி

திரில் வெற்றி

இறுதி ஓவாில் மீதம் ஒரு பந்து இருக்கையில் கொல்கத்தா அணி வெற்றி இலக்கான 184 ரன்களை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருதை கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஆண்ட்ரு ரஸ்ஸல் பெற்றாா்

Story first published: Sunday, May 10, 2015, 13:32 [IST]
Other articles published on May 10, 2015
English summary
Andre Russell and Yusuf Pathan Led KKR to Thrilling Win Over Punjab in yesterday's IPL league match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+