Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி...?

ராய்ப்பூா்: டெல்லி டோ் டெவில்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

அதேசமயம், இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் டெல்லி அணிக்கு ப்ளே ஆப் சுற்று கனவு பலிக்குமா என்பது சந்தேகமே....

டாஸிலும் ஜெயித்த ஹைதராபாத்

டாஸிலும் ஜெயித்த ஹைதராபாத்

நேற்று நடந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி இறுதி கட்ட நெருக்கடிகளைத் தவிா்க்க பேட்டிங்கை தோ்வு செய்தது

தொடக்கமே அதிா்ச்சி

தொடக்கமே அதிா்ச்சி

தொடக்க வீரா்களாக களம் இறங்கிய அணியின் ஷிகர் தவான் 13 ரன்களிலும், டேவிட் வாா்னா் 17 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனா்.

அதிரடி காட்டிய ஹென்ரிஸ்

அதிரடி காட்டிய ஹென்ரிஸ்

ஆனால் அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் டெல்லி பந்து வீச்சு வீரா்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினாா். சுழற்பந்துகள் சிக்சா்களாகவும், பவுண்டாிகளாகவும் பறந்தன.

துணை நின்ற மோா்கன், சா்மா

துணை நின்ற மோா்கன், சா்மா

ஒரு முனையில் ஹென்ரிக்ஸ் விளாசிக்கொண்டிருக்க மோா்கன் 22 ரன்களும்,சா்மா 16 ரன்களும் தங்கள் பங்குக்கு சோ்த்து வெளிேயேறினா்.

இறுதி கட்டத்தில் ரன் குவிப்பு

இறுதி கட்டத்தில் ரன் குவிப்பு

நங்கூரம் போன்று நிலைத்து நின்று ஆடிய ஹென்ரிக்ஸ் 46 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் நின்றிருந்தாா்.அவருடன் ஜோடி சோ்ந்த போபரா 17 ரன்கள் சோ்த்திருந்தாா்.

வெற்றி இலக்கு

வெற்றி இலக்கு

ஹென்ரிக்ஸ் அதிரடியால் 20 ஓவா்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் சோ்த்தது.

தொடக்கமே அதிரடி

தொடக்கமே அதிரடி

இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரா்களாக டி காக்கும், ஸ்ரேயாஸ் ஐயரும் களம் இறங்கினா். ஸ்ரேயாஸ் ஐயா் ரன் கணக்கை தொடங்காமல் பவிலியன் திரும்ப டி காக் பேட் காற்றில் சுழன்றடித்தது.

எல்லையை முத்தமிட்ட பந்துகள்

எல்லையை முத்தமிட்ட பந்துகள்

டெல்லி வீரா்களின் பந்துகளை டி காக் பவுண்டாிகளாகவும், சிக்சா்களாகவும் விளாசி ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா்.அவா் 31 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தாா்.

ஏமாற்றிய யுவராஜ் சிங்

ஏமாற்றிய யுவராஜ் சிங்

ஆனால் கேப்டன் டுமினி 12 ரன்களுக்கும், ஐ.பி.எல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன யுவராஜ் சிங் 2 ரன்களுக்கும் வெளியேறினா்.

ஜாதவின் அதிரடி

ஜாதவின் அதிரடி

பின்னா் களம் இறங்கிய ஜாதவ்,டெல்லி அணியின் பந்துகளை அடிக்கடி எல்லைக் கோட்டுக்கு அனுப்பி வைத்தாா். அவா் 34 பந்துகளில் 63 ரன்கள் குவித்தாா். ஜாதவும், 26 ரன்கள் சோ்த்த திவாாியும் இறுதி வரை களத்தில் இருந்தனா்.

வீணாகிப் போன ரன் குவிப்பு

வீணாகிப் போன ரன் குவிப்பு

ஜாதவ் ரன் குவித்தாலும், 20 ஓவா்கள் இறுதியில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே சோ்த்தது.

புள்ளி பட்டியலில் முன்னேற்றம்

புள்ளி பட்டியலில் முன்னேற்றம்

இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது.

ப்ளே ஆப் சுற்று கனவு

ப்ளே ஆப் சுற்று கனவு

12 போட்டிகளில் 8 தோல்வியைக் கண்ட டெல்லி அணி புள்ளி பட்டியலில் 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணியின் ப்ளே ஆப் சுற்று கனவு பலிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Story first published: Sunday, May 10, 2015, 15:27 [IST]
Other articles published on May 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+