Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் விறுவிறு விற்பனை!

சென்னை: 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் பல மணிநேரம் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்குவதால் விற்பனை விறுப்பாக இருக்கிறது.

8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மொகாலி, அகமதாபாத், ஐதராபாத், புனே, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

சேப்பாக்கம் போட்டிகள்

சேப்பாக்கம் போட்டிகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-ந்தேதி டெல்லி டேர்டெவில்சுடனும் (இரவு 8 மணி), 11-ந்தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும் (மாலை 4 மணி), 25-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடனும் (இரவு 8 மணி),

28-ந்தேதி கொல்கத்தா நைட்ரைடர்சுடனும் (இரவு 8 மணிக்கு), மே 4-ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனும் (மாலை 4 மணி), மே 8-ந்தேதி மும்பை இந்தியன்சுடனும் (இரவு 8 மணி), மே 10-ந்தேதி ராஜஸ்தானுடனும் (இரவு 8 மணி) சேப்பாக்கம் மைதானத்தில் மோது கின்றன.

முதல் 2 போட்டிகளுக்கு..

முதல் 2 போட்டிகளுக்கு..

சென்னையில் நடைபெறும் முதல் 2 போட்டிகளுக்கான (9 மற்றும் 11-ந்தேதி ஆட்டங்கள்) டிக்கெட்டுகள் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் நின்றிருந்த ரசிகர்கள் ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். இன்று காலை முதலே டிக்கெட்டுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்து வருகிறது

இணையதளத்தில்..

இணையதளத்தில்..

அதே நேரத்தில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆன்லைனில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. in.bookmyshow.com இணைய தளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம்.

ரேட் எவ்வளவு?

ரேட் எவ்வளவு?

ஆன்லைனில் ரூ.1,500 , ரூ.2,500 , ரூ.3 ஆயிரம் , ரூ.4 ஆயிரம் , ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கை வீரர்களுக்கான தடை நீடிப்பு

இலங்கை வீரர்களுக்கான தடை நீடிப்பு

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடுவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்க இயலாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவிடம் தெரிவித்துவிட்டது.

இலங்கை வீரர்கள் யார்?

இலங்கை வீரர்கள் யார்?

டெல்லி டேர்டெவில்ஸின் மேத்யூஸ் , கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெரைரா , மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்கா ஆகிய 3 இலங்கை வீரர்கள் இம்முறை ஐ.பி.எல். தொடரில் ஆடுகின்றனர்.. ஆனால் சென்னையில் நடைபெறும் போட்டியில் மூவரும் விளையாட முடியாது நிலை நீடிக்கிறது.

Story first published: Monday, April 6, 2015, 11:55 [IST]
Other articles published on Apr 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+