Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல் 8 துவக்கவிழா: ஹிருத்திக் உடன் ஆடப்போகும் கோஹ்லியின் காதலி அனுஷ்கா

கொல்கத்தா: ஐ.பி.எல் 8 கிரிக்கெட் விளையாட்டுப்போட்டியின் தொடக்கவிழாவில் பிரபல பாலிவுட் பிரபலங்கள் ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடனமாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனராம்.

8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 8ஆம்தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. போட்டிக்கு ஒரு நாளுக்கு முன்பாக அதாவது நாளை (7ஆம்தேதி) கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

8 அணிகளின் கேப்டன்கள்

8 அணிகளின் கேப்டன்கள்

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 8 அணிகளின் கேப்டன்களும் மேடையில் தோன்றுவார்கள். விளையாட்டின் உத்வேகத்தை கடைபிடிக்கும் உறுதிமொழியையும் வழக்கம் போல் எடுத்துக் கொண்டு கையெழுத்திடுவார்கள். பின்னர் 8-வது ஐ.பி.எல். சீசன் தொடங்குகிறது என்பதை குறிக்கும் வகையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர் கோப்பையை விழா மேடையில் வைப்பார்.

கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் தொடக்க விழாவில் பிரபலங்களின் கண்கவர் நடனம், கலை நிகழ்ச்சி, லேசர் ஒளி வெள்ளத்தில் இசை விருந்து என்று மொத்தம் 2 மணி நேரம் நடைபெற உள்ளது. இந்த கலைநிகழ்ச்சியை சோனி சிக்ஸ், சோனி மேக்ஸ் சேனல்கள் இதை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

இந்த நிலையில் தொடக்க விழாவில் அசத்தப்போகும் கலைஞர்கள் யார்-யார் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் காதலியுமான அனுஷ்கா சர்மா, இந்த கலைநிகழ்ச்சியில் நடனமாடி அசத்த உள்ளனர்.

ஹிருத்திக் ரோஷன்

ஹிருத்திக் ரோஷன்

பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், சாகித் கபூர், பர்ஹான் அக்தர் ஆகியோரும் நடனமாட உள்ளனர். நடனத்துடன், இசை அமைப்பாளர் பிரித்தமும் கைகோர்க்கிறார். பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

ரசிகர்களுக்கு அனுமதி

ரசிகர்களுக்கு அனுமதி

மேற்கண்ட தகவல்களை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகூர், ‘விழா தொடங்குவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பாக ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொடக்க விழாவிற்கான டிக்கெட்டுகளை ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ரூ.200 முதல்) பெற்றுக் கொள்ளலாம் அல்லது காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை ஸ்டேடியத்தில் வாங்கிக் கொள்ளலாம்' என்றும் குறிப்பிட்டுள்ர் அனுராக் தாகூர்.

அப்போ மைதானத்தில் விராட் ஆட்டம்... மேடையில் காதலி அனுஷ்கா ஆட்டம் அசத்தல்தான் போங்கோ!

Story first published: Monday, April 6, 2015, 8:56 [IST]
Other articles published on Apr 6, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+