Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் சிங்... 'கிங் பிஷர்' மல்லையாவின் மோசமான முதலீடு?

பெங்களூர்: யுவராஜ் சிங்கை ரூ. 14 கோடி கொடுத்து விஜய் மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தப்புக் கணக்குப் போட்டு விட்டார் மல்லையா, யுவராஜுக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுத்திருக்கத் தேவையில்லை என்பது பலரின் கருத்தாக உள்ளது.

காரணம் கடந்த சில வருடங்களாக அதிக போட்டிகளில் ஆடவில்லை யுவராஜ் சிங். மேலும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்த அவர் பெரிய அளவில் சாதிக்கவும் இல்லை.

அவரது சாதனைகள் அனைத்தும் தற்போது புள்ளிவிவர அளவில்தான் உள்ளன. இருப்பினும் அவரைப் போய் ஏன் இவ்வளவு பெரிய தொகைக்கு மல்லையா எடுத்தார் என்பதுதான் பலரது வியப்பாக உள்ளது.

10 கோடியில் முடிய வேண்டியது

10 கோடியில் முடிய வேண்டியது

ரூ. 10 கோடிக்குத்தான் யுவராஜ் சிங் விலை போயிருக்க வேண்டும். ஆனால் திடீரென கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி்யும் ஏலத்தில் இறங்கியதால் விஜய் மல்லையாவுக்கு கெளரவப் பிரச்சினையாகி விட்டது.

கெளரவம் கெளரவம்...

கெளரவம் கெளரவம்...

இதையடுத்து எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று அவர் ஏலத் தொகையை ஏற்ற ஆரம்பித்தார். கடைசியில் ரூ. 14 கோடியில் வந்து அது நின்று விட்டது.

4 கோடி எக்ஸ்ட்ரா

4 கோடி எக்ஸ்ட்ரா

இதனால் 10 கோடியில் விற்றிருக்க வேண்டிய யுவராஜ் சிங் மேலும் 4 கோடிக்கு கூடுதலாக செலவழிக்கப்பட்டு 14 கோடிக்கு விலை போய் விட்டார்.

ஆனால் இது தேவையா

ஆனால் இது தேவையா

ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு யுவராஜ் சிங்கை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்று பலரும் மல்லையாவைப் பார்த்து கேட்கின்றனர்.

2013ல் யுவராஜ் சிங்கின் நிலை

2013ல் யுவராஜ் சிங்கின் நிலை

2013ல் நடந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடினார் யுவராஜ் சிங். அத்தொடரில் அவர் மொத்தமே 238 ரன்கள்தான் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 19 தான். அதிகபட்சம் 34 ரன்களைத்தான் அவரால் எடுக்க முடிந்தது.

6 விக்கெட் எடுத்தார்

6 விக்கெட் எடுத்தார்

அவரது ஸ்டிரைக் ரேட் நன்றாகவே இருந்தது. அதாவது 125.6 ஆக இருந்தது. மேலும் 13 போட்டிகளில் 6 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியிருந்தார்.

ஓராண்டில் 2 சர்வதேச போட்டிகள்தான்

ஓராண்டில் 2 சர்வதேச போட்டிகள்தான்

கடந்த ஓராண்டில் இரண்டு இரண்டு சர்வதேச டுவென்டி 20 போட்டிகளில்தான் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். கடைசியாக அவர் கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடினார். அதில் 77 ரன்கள் எடுத்தார்.

ஒரு நாள் போட்டியில் சொதப்பல்

ஒரு நாள் போட்டியில் சொதப்பல்

ஆனால் ஒரு நாள் போட்டியில் யுவராஜ் சிங் ஜொலிக்கவில்லை. கடந்த ஒரு வருடத்தில் 11 போட்டிகளில் ஆடி 118 ரன்களையே அவர் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 16.85 மட்டுமே.

மல்லையாவின் மோசமான முதலீடு

மல்லையாவின் மோசமான முதலீடு

இதை வைத்துத்தான் விஜய் மல்லையா செய்த முதலீடுகளிலேயே மோசமானது இது என்று பலரும் வர்ணிக்க ஆரம்பித்துள்ளனர்.

Story first published: Thursday, February 13, 2014, 16:57 [IST]
Other articles published on Feb 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+