Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2019 ஏலம்.. ஏலமே வேணாம் என்ற ஆஸி. வீரர்கள்.. யுவராஜ் சிங், ஷமியின் பரிதாப விலை

மும்பை : ஐபிஎல் 2019 ஆண்டிற்கான ஏலம் டிசம்பர் 18இல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் 2018இல் முழுமையான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஆண்டு காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற உள்ளது.

அதன்படி 70 வீரர்கள் வரை இந்த முறை ஏலத்தில் வாங்கப்பட வாய்ப்புள்ளது. இதில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாட்டு வீரர்களும் வாங்கப்படலாம்.

ஐபிஎல் 2019 ஏலம் எப்போது?

ஐபிஎல் 2019 ஏலம் எப்போது?

ஐபிஎல் 2019 சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் வரும் டிசம்பர் 18இல் ஒரே நாளில் நடைபெற உள்ளது. முதலில் பெங்களூருவில் நடைபெறும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஜெய்ப்பூரில் தான் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள் சந்தேகம்

ஆஸ்திரேலிய வீரர்கள் சந்தேகம்

2019 உலகக்கோப்பை வரும் மே இறுதியில் துவங்க உள்ளதால், ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் இந்த முறை ஐபிஎல் தொடரில் ஆட மாட்டார்கள் என தெரிகிறது. மாக்ஸ்வெல், ஆரோன் பின்ச் போன்ற அதிரடி ஆஸ்திரேலிய வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

1000 வீரர்கள் பதிவு

1000 வீரர்கள் பதிவு

இந்த 70 வீரர்கள் ஏலத்திற்கு மிகவும் அதிகமாக சுமார் 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 232 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். இந்த ஆயிரம் வீரர்களில் 70 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. எட்டு அணிகளும் சேர்ந்து 145.25 கோடி மட்டுமே செலவு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுவராஜ் சிங் அடிப்படை விலை

யுவராஜ் சிங் அடிப்படை விலை

சென்ற சீசனில் சரியாக ஆடாத யுவராஜ் சிங், பஞ்சாப் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏலத்தில் பங்கேற்க உள்ள அவரின் அடிப்படை விலை இந்த முறை 1 கோடி மட்டுமே. இந்திய அணியில் ஆடி வரும் ஷமியும் 1 கோடி அடிப்படை விலைக்கு ஏலத்தில் பங்கேற்றுள்ளார்.

ஜெயதேவ் உனட்கட் விலை சரிவு

ஜெயதேவ் உனட்கட் விலை சரிவு

சென்ற ஆண்டு இந்திய வீரர்களில் அதிக விலையான 11.5 கோடிக்கு ஏலம் போன ஜெயதேவ் உனட்கட், இந்த முறை ராஜாஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டு 1.5 கோடி அடிப்படை விலையில் ஏலத்தில் பங்கேற்கிறார்.

Story first published: Thursday, December 6, 2018, 18:00 [IST]
Other articles published on Dec 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+