For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போனாப் போகுது.. யுவராஜ் சிங்கை அடிமாட்டு விலைக்கு ஏலம் எடுத்த மும்பை இந்தியன்ஸ்

ஜெய்ப்பூர் : இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை ஐபிஎல் ஏலத்தின் முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

எனினும், இறுதிச் சுற்றில் அடிப்படை விலை 1 கோடிக்கு வாங்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி போனால் போகிறது என யுவராஜ் சிங்கை வாங்கிப் போட்டுள்ளது.

சென்னை மீது எதிர்பார்ப்பு

சென்னை மீது எதிர்பார்ப்பு

இந்த ஐபிஎல் ஏலம் தொடங்கும் முன் யுவராஜ் சிங் எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சென்னை அணி யுவராஜை வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

யாரும் வாங்கவில்லை

யாரும் வாங்கவில்லை

ஆனால், முதல் சுற்றில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் சீந்தவில்லை. சென்னை அணி அமைதியாக இருந்ததை பார்த்து பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை அணியில் இருந்து பஞ்சாப் அணி நீக்கி இருந்தது. அந்த அணி தவிர எந்த அணியாவது அவருக்கு ஏலம் கேட்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது.

கடைசி வாய்ப்பில் அமைதி

கடைசி வாய்ப்பில் அமைதி

இந்த நிலையில், முதல் சுற்றில் ஏலம் போகாத வீரர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பிலும் யுவராஜ் சிங் பெயர் வாசிக்கப்பட்ட போது அனைத்து அணிகளும் அமைதியாக இருந்தன.

மும்பை இந்தியன்ஸ் வாங்கியது

மும்பை இந்தியன்ஸ் வாங்கியது

மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நொடியில் யுவராஜ் சிங்கின் அடிப்படை விலையான 1 கோடிக்கு யுவராஜ் சிங்கை ஏலம் எடுத்தது. யுவராஜ் சிங் 2019 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துவிட மாட்டோமோ? என்ற ஏக்கத்தில் இருக்கிறார். ஐபிஎல் ஏலத்தில் கூட அவர் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

வீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்

Story first published: Tuesday, December 18, 2018, 21:02 [IST]
Other articles published on Dec 18, 2018
English summary
IPL auction 2019 - Yuvraj singh sold for base price 1 crore to Mumbai Indians
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+