Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் தான் வேணும்.. என்ன வேணா பண்ணுவோம்.. அடம்பிடிக்கும் கொல்கத்தா!

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனுக்கும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக தொடர்வார் என்பதில் உறுதியாக உள்ளது.

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் செல்லவில்லை. லீக் சுற்றின் இடையே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. அணியில் கேப்டனுக்கு எதிராக கலகம் வெடித்தது.

அப்போதே அடுத்த சீசனில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக தொடர்வது சந்தேகம் என கூறப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக்குக்கு சாதகமாக அனைத்தையும் மாற்றி வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

கேப்டன் தினேஷ் கார்த்திக்

கேப்டன் தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் கடந்த 2018 சீசனில் நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் அணியை பிளே-ஆஃப் வரை அழைத்துச் சென்று அசத்தினார்.

கலகம்

கலகம்

2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் கலகம் வெடித்தது. பாதி தொடரில் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்தனர் சில வீரர்கள். துணை கேப்டன் ராபின் உத்தப்பா களத்திலேயே அவருக்கு எதிராக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராபின் உத்தப்பா நீக்கம்

ராபின் உத்தப்பா நீக்கம்

இந்த நிலையில், 2020 ஐபிஎல் ஏலத்துக்கு முன் ராபின் உத்தப்பா அணியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சீசனில் அவரது பேட்டிங்கும் பெரிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர் மாற்றம்

பயிற்சியாளர் மாற்றம்

பயிற்சியாளர் ஜாக்கஸ் காலிஸ் நீக்கப்பட்டு, புதிய பயிற்சியாளராக பிரென்டன் மெக்குல்லம் நியமிக்கப்பட்டார். கேப்டன் தினேஷ் கார்த்திக் அதே பதவியில் தொடர்வாரா? என்ற கேள்வி இருந்தது.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

இந்த நிலையில், 2020 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கலந்து கொண்டது. இந்த ஏலத்தில் புதிய பயிற்சியாளர் மெக்குல்லம் யாரை வாங்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இயான் மார்கன் தேர்வு

இயான் மார்கன் தேர்வு

இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை வென்ற கேப்டன் இயான் மார்கனை குறி வைத்து வாங்கினர் மெக்குல்லம். அதன் மூலம், இயான் மார்கன் கொல்கத்தா அணியின் கேப்டனாக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது.

மெக்குல்லம் உறுதி

மெக்குல்லம் உறுதி

எனினும், மெக்குல்லம் தினேஷ் கார்த்திக் தான் கேப்டன். அவருடன் தலைமைக் குழுவில் இயான் மார்கன் அவருக்கு உதவுவார் என்று கூறி கேப்டன்சி குழப்பத்தை தீர்த்து வைத்தார்.

கொல்கத்தா அணி உறுதி

கொல்கத்தா அணி உறுதி

இதன் மூலம், ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கொல்கத்தா அணி, அவர் ஒருவருக்காக அணியில் பல மாற்றங்களை செய்துள்ளது.

Story first published: Friday, December 20, 2019, 16:50 [IST]
Other articles published on Dec 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+