Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர்நைட்டில் கோடீஸ்வரன் ஆன அந்த நாலு சின்னப் பசங்களை பார்க்கணுமா? இவங்க தான் அது!

கொல்கத்தா : 2020 ஐபிஎல் ஏலத்தில் நான்கு இளம் வீரர்கள் சில வினாடிகளில் கோடிகளை சம்பாதித்து விட்டனர்.

இந்திய உள்ளூர் தொடர்களில் அண்டர் 19 பிரிவில் ஆடி வரும் இளம் வீரர்கள் நால்வருக்கு ஐபிஎல் ஏலம் பெரிய திருப்பத்தை அளித்துள்ளது.

அந்த நான்கு வீரர்கள்

அந்த நான்கு வீரர்கள்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் சிங், ரவி பிஸ்னோய், ப்ரியம் கார்க் ஆகிய அந்த நான்கு இளம் வீரர்களும் இந்திய அண்டர் 19 மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர்கள்

2020 ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ் 15.50 கோடிக்கும், கிளென் மேக்ஸ்வெல் 10.75 கோடிக்கும் ஏலம் போனார்கள். அவர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை விட அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

கோடிகள்

கோடிகள்

இந்த நான்கு இளம் வீரர்களும் அவர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை விட அதிக விலைக்கு வாங்கப்பட்டு ஆச்சரியம் அளித்துள்ளனர். நால்வரும் 1 கோடிக்கும் அதிகமாக ஏலத்தில் விலை போனார்கள்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

கடந்த சில வாரங்கள் முன்பு உள்ளூர் தொடரில் இரட்டை சதம் அடித்து இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த மும்பை வீரர் தான் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். அண்டர் 19 அணியிலும் இடம் பெற்றுள்ளார். இவரை 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது ராஜஸ்தான்.

விராட் சிங்

ஜார்கண்ட் வீரரான விராட் சிங், சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரில் 10 போட்டிகளில் 343 ரன்கள் குவித்து இருந்தார். விஜய் ஹசாரே தொடரில் 7 போட்டிகளில் 335 ரன்கள் குவித்து அசத்தினார். இவரை 1.90 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ரவி பிஸ்னோய்

லெக் ஸ்பின்னரான ரவி பிஸ்னோய் இளைஞர்கள் ஒருநாள் தொடரில் 7 போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரை பஞ்சாப் அணி போட்டி போட்டு 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

ப்ரியம் கார்க்

ப்ரியம் கார்க்

அண்டர் 19 அணி கேப்டன் ப்ரியம் கார்க்-ஐ ஹைதராபாத் அணி குறி வைத்து 1.90 கோடிக்கு வாங்கியது. இவர் சிறந்த அண்டர் 19 வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

Story first published: Thursday, December 19, 2019, 21:37 [IST]
Other articles published on Dec 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+